வல்லமை விமர்சனம் 3.5/5.. பிரேம்ஜி பின்னிட்டீங்க ஜி..

வல்லமை விமர்சனம் 3.5/5.. பிரேம்ஜி பின்னிட்டீங்க ஜி..

 

வல்லமை விமர்சனம் 3.5/5.. பிரேம்ஜி பின்னிட்டீங்க ஜி..

 

ஸ்டோரி…

தன் மனைவியை இழந்த துயரத்தில் தன் 10 வயது மகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வேலை தேடி வருகிறார் அப்பா பிரேம்ஜி.. பகலில் ஆட்டோ ஒட்டிக் கொண்டும் இரவில் சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டும் தன் மகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

ஒரு நாள் மகளின் பிறப்புறுப்பில் ரத்தம் வரவே மகள் பூப்படைந்து விட்டாள் என எண்ணி நினைத்து டாக்டர் தீபாவிடம் அழைத்து செல்கிறார்.. ஆனால் உன் மகள் இன்னும் வயதுக்கு வரவில்லை.. அவளை யாரோ அவளுக்கே தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்கிறார் டாக்டர் தீபா..

இதனை பிரேம்ஜி இடம் சொல்லும்போதே திவ்யதர்ஷினியும் ரகசியமாக தெரிந்து கொள்கிறார்..

“அப்பா என்னை சீண்டியவனை நாம் தண்டிக்க வேண்டும்.. அவனை கொல்ல வேண்டும் என துடிக்கிறார்.. அதன் பிறகு அப்பாவும் மகளும் இணைந்து என்ன செய்தனர்.. அந்த குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார்கள்? அவனுக்கு எப்படி தண்டனை கொடுத்தனர் என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் கலாட்டா செய்து கொண்டும் காமெடி செய்து கொண்டிருந்த பிரேம்ஜி.. இதில் முழுக்க முழுக்க சீரியஸாக இறங்கியுள்ளார்.. ஒரு இன்ச் கூட காமெடி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து கனிவான அப்பாவாக நல்ல நடிப்பை கொடுத்து இருக்கிறார்..

இவரது மகளாக திவ்யதர்ஷினி.. தமிழில் இவருக்கு இரண்டாவது படம் என்று சொன்னாலும் நம்பும்படியாக இல்லை.. படத்தில் ஹீரோயின் நான்தான்.. பழிவாங்கல் கதையை எடுத்து அதை திவ்யதர்ஷினி பக்காவாக செய்திருக்கிறார்.. பள்ளியில் அவர் ஆடு பரதநாட்டியத்தில் அவரது ஒப்பனை சிறப்பு. குழந்தை நட்சத்திரமாக ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்..

சக்கரவர்த்தி கேரக்டரில் கெத்தாக இருக்கிறார் வில்லன் சி ஆர் ரெஜீத்.. ஹீரோவை விட ஸ்மார்ட்டாக இருக்கும் இவருக்கு கிடைத்தது வில்லன் கேரக்டர் தான் போல..

டாக்டராக வரும் தீபா ஷங்கர் வசனத்தில் பிரித்து மேய்ந்திருக்கிறார். பாலியல் வழக்குகள் மற்றும் பிரச்சனைகளை குறித்து அவர் பேசும் நீண்ட வசனம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.. பாலியல் குற்ற சம்பவங்களில் இந்தியாவில் தமிழகத்திற்கு மூன்றாவது இடம் என்ற தகவலும் இதில் சொல்லப்பட்டுள்ளது..

இவர்களுடன் வழக்கு எண் முத்துராமன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகிய இருவரும் போலீசாக எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ஜி கே வி என்பவர் இசையமைத்திருக்கிறார்.. பாடல்களையும் இசையும் உணர்வு பூர்வமாக கொடுத்திருக்கிறார்..

படத்தின் ஆரம்பத்தில் வந்து நாயகனுக்கு உதவும் ஆட்டோ டிரைவராக நான் தான் இந்தப் படத்தின் இயக்குனர் என அட்டன்ட்ஸ் போட்டிருக்கிறார் கருப்பையா முருகன்..

அரசு பள்ளிகளுக்கு என்னதான் நன்கொடையை செல்வந்தர்கள் கோடி கோடியாக கொடுத்தாலும் அவர்களது பெயர் பள்ளிக்கு வைக்கப்படுமா? என தெரியவில்லை.. தேசியத் தலைவர்கள் தியாகிகள் பெயர்களை வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்..

சமுதாய மாற வேண்டுமென்றால் நாம் மாற வேண்டும்.. நல்லது நடக்க வேண்டும் என்றால் நாம் தான் அதை செயல்படுத்தி காட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்..

உடல் வலிமை விட மனவலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த வல்லமை படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கருப்பையா முருகன்.

 

Vallamai movie review