TEN HOURS விமர்சனம்.. திரில்லர் ஹவர்ஸ்
TEN HOURS விமர்சனம்.. திரில்லர் ஹவர்ஸ்
ஸ்டோரி..
ஒரு நாள் இரவில் 10 மணி நேரத்தில் நடக்கும் கதை..
சேலம் ஆத்தூரில் போலீசாக பணிபுரிகிறார் சிபிராஜ்.. இவருடன் பணிபுரியும் மற்றொரு அதிகாரி கஜராஜ்.. அடுத்த நாள் சபரிமலைக்கு செல்ல காத்திருக்கும் சிபிக்கு ஒரு சவால் நிறைந்த கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது..
தன் பெண்ணை காணவில்லை என ஒரு தகப்பன் வந்து புகார் கொடுக்க அன்று இரவே கடத்தல்காரர்களை தேடி அலைகிறார் சிபிராஜ்.. அப்போது அந்தக் கடத்தல் கும்பல் 3 காவலர்களை சுட்டுக்கொன்று விடுகின்றனர்..
அது மட்டும் இல்லாமல் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பேருந்து ஒன்றில் ஜீவா (ராஜ் ஐயப்பா) என்ற நபரும் கொல்லப்பட்டு கிடக்கிறார்..
பஸ்ஸில் பயணம் செய்த எல்லாவரிடமும் விசாரித்தாலும் அதற்கான விடை கிடைக்காத நிலையில் சிபிராஜ் என்ன செய்தார்? ஓடும் பஸ்ஸில் ஒருவர் கொல்லப்பட்டு கிடக்க எந்த பயணியும் தப்பித்து செல்லாத நிலையில் யார் அவரை கொலை செய்தார்.? குற்றவாளிகளை எப்படி கண்டுபிடித்தார்.?
பெண் காணாமல் போனதற்கும் பஸ்ஸில் ஒரு பயணி கொல்லப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா.? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
பாட்டு இல்லை.. ரொமான்ஸ் இல்லை ஹீரோயின் இல்லை ஆனாலும் தன் கேரக்டரில் கம்பீரம் காட்டி நிற்கிறார் நாயகன் சிபிராஜ்.. சபரிமலைக்கு செல்லும் சாந்தமான சாமியாக பொறுப்பான போலீசாக கேஸ்ட்ரோ ரோலில் கெத்து..
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வாய்ஸ் ஓவரில் கஜராஜ் கலக்கி இருக்கிறார். இவரது குரல் படத்தின் கதையை நகர்த்தி செல்கிறது..
ஜீவா கேரக்டரில் ராஜ ஐயப்பா.. ஸ்மார்ட் ஆன இளைஞராக கதையின் அச்சாணியாக வருகிறார்.. ஆடுகளம் முருகதாஸ், ஜீவா ரவி, வில்லனாக திலீபன் உள்ளிட்டோரும் கதைக்கு பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.. அழகான நடிப்பில் கவர்கிறார் சாருமிஷா..
டெக்னீசியன்ஸ்…
WRITER & DIRECTOR – ILAYARAJA KALIYAPERUMAL
CINEMATOGRAPHER – JAI KARTHIK
MUSIC DIRECTOR – KS SUNDARAMOORTHY
EDITOR – LAWRANCE KISHORE
ART DIRECTOR – ARUN SHANKAR DURAI
STUNT – SAKTHI SARAVANAN
SOUND DESIGN – SACHIN (Sync Cinemas)
SOUND MIXING – ARAVIND MENON
PRODUCTION CONTROLLER – BHARATHI RAJA
PRO – NIKIL MURUKAN
STILLS – RAJ
PUBLICITY DESIGNER – DINESH ASHOK
இளையராஜா கலியபெருமாள் என்பவர் இயக்கியிருக்கிறார்.. ஒருநாள் இரவு கதை என்றாலும் அதை போர் அடிக்காமல் திரில்லராக கொண்டு சென்று இருக்கிறார்..
ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ஒரு பஸ்ஸில் பாதி கதை போலீஸ் ஸ்டேஷனில் மீதி கதை மேலும் இரவு நேர ஹைவேயில் பயணிக்கும் பஸ் என அனைத்தையும் அழகாக படம் பிடித்து த்ரில்லர் கதைக்கு ஏற்ப விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார்..
கதையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி.. ஒரே போல இசை மீண்டும் மீண்டும் வந்தாலும் நாம் தியேட்டரை விட்டு நகர்ந்தாலும் அந்த இசை நம் காதுகளில் ஒலிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்..
நம்பர் பிளேட்டை மாற்றி வைத்து காரில் கடத்தல் லாரியில் கடத்தல் என பல சம்பவங்களை கேட்டு இருக்கிறோம். இதில் ஒரே நம்பர் பிளேட்டை வைத்து பயணம் செய்யும் இரண்டு பஸ்கள் என பல திருப்பங்களுடன் கதையை சொல்லி அத்துடன் அரசியலையும் இணைத்து இருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்…
அரசியல் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் என்ன வேண்டுமானாலும் செய்வான்.. மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்ற சமூக கருத்தையும் விதைத்திருக்கிறார் இயக்குனர்.
ஆக இந்த 10 ஹவர்ஸ்.. திரில்லர் ஹவர்ஸ்
Ten Hours movie review

