ரஜினி – கமலிடம் கற்றது.. மணிவண்ணன் சொன்னது.. வடிவேலு வச்ச டைட்டில் கேங்கர்ஸ்.. – சுந்தர் சி
ரஜினி – கமலிடம் கற்றது.. மணிவண்ணன் சொன்னது.. வடிவேலு வச்ச டைட்டில் கேங்கர்ஸ்.. – சுந்தர் சி
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் வின்னர்.. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
எனவே சுந்தர் சி & வடிவேலு கூட்டணிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. ஆனால் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது..
சுந்தர். சி இயக்கியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’.. இதில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்..
முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.. இதில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா மற்றும் வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் சார்பாக நடிகை குஷ்பு மற்றும் ஏ.சி. சண்முகம் தயாரித்துள்ள கேங்கர்ஸ் படத்துக்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்..

ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.. மாணவ மாணவிகளின் ஆரவாரத்தில் இந்த விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது..
நடிகர் வடிவேலு சாங் இந்த ரெயின் என்ற பாடலுடன் தன் பேச்சை ஆரம்பித்தார்.
யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை நானும் சுந்தர்சியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இணைந்து பணி புரிகிறோம். இங்கு சேர்த்து வைப்பதை விட பிரித்து வைப்பதிலேயே பலர் குறியாக உள்ளனர்.. நாங்க சொல்லாதது அங்கு ஒன்று சொல்லி இங்கு ஒன்று சொல்லி எங்களை பிரித்து வைத்து விட்டனர் என வடிவேலு பேச ஆரம்பித்தார்.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அஞ்சனா சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகிய இருவரிடம் கல்லூரி மாணவ மாணவிகள் பல கேள்விகளை முன் வைத்தனர் அப்போது இருவரும் சுவாரஸ்யமாக பதில் அளித்தனர்.
30 வருடங்களுக்கு முன்பு முறைமாமன் படத்தை இயக்கினேன் தற்போது கேங்கர்ஸ் படத்த இயக்கி உள்ளேன்.. முதல் படத்தை இயக்கும்போது இருந்த பயமும் பொறுப்பும் இப்போதும் இருக்கிறது என்று பேச்சு ஆரம்பித்தார் சுந்தர் சி.
பெரும்பாலான கேள்விகளை சுந்தர் சி இடம் மாணவ மாணவிகள் கேட்டனர்.. அப்போது தங்கள் குரு மணிவண்ணிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன.? என்று ஒரு மாணவி கேட்டார்.. அதற்கு முடியாதது எதுவுமில்லை என மணிவண்ணன் அடிக்கடி சொல்வார்.. அதையே அவரிடம் முக்கிய பாடமாக கற்றுக் கொண்டேன்..
ஒருநாள் ஒரு உதவி இயக்குனர் கிரிக்கெட் விளையாட மற்றொருவரை அழைத்தார்.. எனக்கு கிரிக்கெட் தெரியாது என்றார்.. சினிமாவை மட்டும் பிறந்தது முதல் கற்றுக் கொண்டு வந்தாயா? ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்றையும் கற்க்கிறோம்.. எனவே எதையும் எளிதாக கற்கலாம் என சொன்னார்..
அன்று முதல் முடியாதது எதுவுமில்லை.. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதன் படி இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் பாடகர் விநியோகஸ்தர் என ஒவ்வொரு துறையிலும் கவனம் செலுத்தி வருகிறேன்..
மேலும் ரஜினி & கமல் குறித்து ஒரு மாணவி கேட்டபோது.. இருவரும் இன்று மிகப்பெரிய உச்சத்தில் இருந்தாலும் அவர்கள் புதுமுக நடிகர்களைப் போலவே ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர்.. தங்கள் முதல் படமாக நினைத்து முழு கவனத்தை செலுத்தி அவர்கள் நடித்து வருவதால் தான் அவர்கள் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருக்கின்றனர் என்றார் சுந்தர் சி..
வடிவேல் காமெடிக்கு என்றும் வயசாகாது.. அவர் என்றும் மக்களை மகிழ்விப்பவர்.. முதலில் இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று குழம்பித் தவித்தோம்.. கேங்ஸ்டர் கதை என்பதால் அப்போது கேங்கர்ஸ் என்ற வார்த்தையை சொன்னார் வடிவேலு.. ஆனால் இப்படி ஒரு வார்த்தையே இல்லை.. கேங்ஸ்டர் என்ற வார்த்தை மட்டும்தான் உள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தோம்..
ஆனால் கேங்கர்ஸ் என்ற வார்த்தை புதிதாக இருந்தது.. இல்லாததை புதிதாக வைப்போம்.. வடிவேலு சொன்னதால் அதையே வைத்து விட்டோம் என்று சொன்னார் சுந்தர் சி..
மாணவ மாணவர்கள் மத்தியில் கல்லூரியில் இந்த விழாவை நடத்துவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.. உங்களை எனர்ஜி எனக்கு உற்சாகத்தை தருகிறது.. சில காலங்களாக கல்லூரி நிகழ்ச்சிகளில் தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது இப்படி எல்லாம் மிஸ் செய்துவிட்டு என ஃபீல் பண்ணுகிறேன்.. இங்கு இந்த விழாவை அமைத்துக் கொடுத்த ஏ சி சண்முகம் அவர்களுக்கு நன்றி..
இந்த முழு படத்தையும் மொத்தமே 35 நாள் ஷூட்டிங்கில் முடித்துவிட்டோம் எனவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
Sundar and Vadivelu starring Gangers pre release event

