Good Bad Ugly விமர்சனம்.. ஓவர் பில்டப் மட்டும் போதுமா.?

Good Bad Ugly விமர்சனம்.. ஓவர் பில்டப் மட்டும் போதுமா.?

 

Good Bad Ugly விமர்சனம்.. ஓவர் பில்டப் மட்டும் போதுமா.?

ஸ்டோரி…

‘விடாமுயற்சி’ படத்தில் தொலைத்து விட்ட மனைவியை தேடும் நாயகனாக அஜித் நடித்திருந்தார்.. இந்த குட் பேட் அட்லி படத்தில் மகன் கடத்தப்பட்டதால் அவனைத் தேடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் அப்பா அஜித்..

 

18 வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய டானாக இருக்கும் அஜித் குழந்தை பிறந்த பிறகு திருந்தி வாழ்கிறார்.. ஆனாலும் மனைவியின் சொல்படி சரண்டராகி சிறையில் 18 வருடங்களாக கைதியாக இருந்து வருகிறார்.

 

மகனின் 18வது பிறந்தநாளில் மகனை சந்திக்க இருப்பதாக அஜித் வாக்குறுதி அளித்த நிலையில் வில்லன் அர்ஜுன் தாஸ் கும்பல் மூலம் கடத்தப்படுகிறார்.. 18வது பிறந்த நாளுக்குள் மகனை மீட்டெடுப்பின் என அர்ஜுன் சபதம் செய்து அதனை நிறைவேற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

Ajith Kumar, Trisha, Arjun Dass, Sunil, Prabhu, Prasanna, Simran, Priya Varrier, Shine Tom Chacko, Yogi Babu, Redin Kingsly, Karthikeya

 

ஸ்டைலாக மாசாக கெத்து காட்டியிருக்கிறார் அஜித்.. ஆனால் படம் முழுக்க எமோஷனல் இல்லாமல் நடப்பது ஓடுவது நடப்பது ஆக்ஷன் செய்வது மட்டுமே செய்து இருக்கிறார் அஜித்.. ஜெயில் காட்சிகளில் ஆட்டம் போடுவது.. போலீஸ் டிரஸ் போடுவது என எதுவும் நம்பும்படியாக இல்லை..

 

த்ரிஷாவுக்கும் பெருசாக வேலை இல்லை.. ஒரு ரொமான்ஸ் கூட இல்லை.. கெஸ்ட் ரோலிங் சிம்ரன் வருகிறார்..

வில்லனாக அர்ஜுன் தாஸ்.. இரு வேடங்களில் மிரட்டி இருக்கிறார்.. இவரின் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. யோகி பாபு இருந்தால் படம் ஓடும் என்பதால் யோகி பாபு ஒரு காட்சியில் வருகிறார்.

அஜித்துக்கு பில்டப் டயலாக்குகளை சொல்லி சொல்லி படத்தை ஓட்டி இருக்கிறார் சுனில்.. அஜித்தின் மகனாக கார்த்திகேயன் அவரின் காதலியாக பிரியா வாரியர் இருவரும் இளசுக்கு கொஞ்சம் கேரண்டி கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

Directed By : Adhik Ravichandran

Music By : GV Prakash Kumar

Produced By : Mythri Movie Makers – Naveen Yerneni and Y. Ravi Shankar

பழைய பட கதையை நம்பி பழைய ஹிட் படங்களை நம்பி பழைய ஹிட் பாடல்களை நம்பி முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.. படத்தில் ஏதோ ஒரு சில காட்சி பில்டப் இருந்தால் ஓகே ஆனால் படம் முழுவதும் பில்டப் பில்டப் தான்… இதுவே அஜித் ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களுக்கு எரிச்சலை தருகிறது..

 

சில காலமாக அசுரன் அமரன் உள்ளிட்ட படங்களுக்கு அருமையாக இசையமைத்த ஜிவி பிரகாஷ் இதில் முழுக்க இரைச்சலை மட்டுமே இசையாக கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக நான்கு இளையராஜா பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்.. சண்டைக் காட்சிகளுக்கு கூட இளமை இதோ… ஒத்த ரூபாய் தாரேன் என்ற பாடல்களை பயன்படுத்தி நம்மை கடுப்பேத்தி விட்டார்..

 

Good Bad Ugly movie review