மீண்டும் தனுஷ் – மாரி செல்வராஜ் வெற்றி கூட்டணியை அமைத்த ஐசரி கணேஷ்
மீண்டும் தனுஷ் – மாரி செல்வராஜ் வெற்றி கூட்டணியை அமைத்த ஐசரி கணேஷ்
இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.
தன் முதல் படத்திலேயே சிறந்த இயக்குனராக முத்திரை பதித்தார்.. இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தை இயக்கினார்.. அதன் பின்னர் உதயநிதி நடிப்பில் மாமன்னன் என்ற படத்தை இயக்கி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார்.
இதில் எவரும் எதிர்பாராத வகையில் வடிவேலுவை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.. மேலும் கீர்த்தி சுரேஷ் ஏ ஆர் ரகுமான் என மாபெரும் கூட்டணி அமைத்தார்..
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வாழை என்ற படத்தை இயக்கி தயாரித்து அதையும் வெற்றி படமாக கொடுத்து தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க இயக்குனராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ்..

தற்போது விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் ‘பைசன் காளமாடன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.. இந்த படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது தனது 6வது படத்தில் தனுசு உடன் மீண்டும் கை கோர்க்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.. இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 56வது படமாகும்.

இந்த படத்தை பிரபல வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.. இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படம் அக்டோபர் 1ம் தேதி சுடச்சுட வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush again joins with Mari Selvaraj for Vels Production

