S/o காலிங்கராயன் விமர்சனம்
S/o காலிங்கராயன் விமர்சனம்
ஸ்டோரி…
நாயகன் உதய் கிருஷ்ணா.. இவரை சில மர்ம நபர்கள் துரத்தி துப்பாக்கியால் சுட்டு விட இவர் தவறி ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஆற்றில் விழுகிறார்.. அங்கு செல்லக்கிளி இவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உதவி செய்கிறார்.. இவர் 3 மாத காலம் தன்னுடைய சுயநினைவு இழந்து தான் யார் என்று தெரியாமல் ஊர் மக்களோடு வாழ்ந்து வருகிறார்..
அந்த கிராமத்திற்கு வரும் போலீஸ் இவரை விசாரணைக்காக அழைத்து செல்கின்றனர்.. அதன் பின்னர்தான் இவர் யார்? என்ற விவரங்கள் தெரிய வருகிறது.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாயகனாக உதய் கிருஷ்ணா.. ரொமான்ஸ் வரவில்லை என்றாலும் ஆக்சன் நாயகனுக்கு ஏற்ற உயரத்தில் அசத்தியிருக்கிறார்.. சேது ஜமீன் கேரக்டரில் நடித்தவர் கொஞ்சம் காட்சி என்றாலும் கம்பீரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகனுக்கு உறுதுணையாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் இயக்குநர் பாரதி மோகன்.. இவரே தயாரிப்பாளர் இயக்குனர் என்பதால் படத்தின் 70% காட்சிகளை எடுத்துக் கொள்கிறார்.. மலைவாழ் மக்களின் வாழ்வியல், நரபலி பலவற்றை கலந்து கமெர்ஷியல் விருந்தாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார்..
நாயகியாக செல்லக்கிளி கேரக்டரில் நடித்துள்ள தென்றல் ரசிக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இரண்டாம் நாயகிகளாக குஷி & சைலஜா.. நடிப்பில் குறையில்லை.. மற்றொரு நாயகனாக மருது செழியன் என்பவரும் கவனிக்க வைக்கிறார்..
இவர்களுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆனந்த் பாபு நடித்திருக்கிறார்.. சொல்லும் அளவுக்கு எந்த காட்சியிலும் ஸ்கோர் செய்யவில்லை.. மேலும் மீசை ராஜேந்திரன், அமைச்சராக ஆனந்தகோடி, சுப்ரமணியம், ஆடிட்டர் பாஸ்கர், கண்டாங்கி பட்டி ராஜன், காஞ்சி சேகர் ஆகியோரும் உண்டு..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் சந்திரன் சாமியின் வனப்பகுதி காட்சிகள் கண்களை குளுமையாக்குகிறது..
கிருஷ் சிவாவின் பின்னணி இசை கவனம் பெறவில்லை.. ‘கூவாதோ பாடாதோ கொல்லிமலை குயிலே…” என்ற பாடல் ரசிக்கும் ரகம்..
எடிட்டர் சரண் சண்முகம்.. சண்டை சரவெடி சரவணன்.. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வார்த்தைகள் உதட்டில் ஒட்டவில்லை.. இதைக்கூட எடிட்டர் கவனிக்கவில்லையா.?
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன் முன் பவானி & நொய்யல் ஆறுகளை இணைப்பதற்காக பாசன கால்வாய் கட்டிய காலிங்கராயனை பெருமைப்படுத்தும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.. அந்த கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார் சேது என்பவரும்..
ஆனா சொல்ல வந்த விதத்தில் பல தடுமாற்றங்களை சந்தித்து இருக்கிறார் இயக்குனர் பாரதி மோகன்..
So Kaalingarayan movie review

