அஸ்திரம் விமர்சனம் 3.75/5..
அஸ்திரம் விமர்சனம் 3.75/5..
ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடி தோற்றவர்களை அவர்களே தற்கொலை செய்து கொள்ள அளவுக்கு கொடூரமானவனாக இருக்கிறார்.. அவர்கள் அப்படி செய்ய என்ன காரணம்? என்ற கேள்வியுடன் படம் தொடங்குகிறது.
ஸ்டோரி…
மக்கள் மத்தியில் குடும்பத்தார் மத்தியில் அடுத்தடுத்து தற்கொலைகள் நடக்கிறது.. இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வயிற்றுக் கிழித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.. இவை அனைத்தும் ஒன்றாக ஒரே மாதிரி நடந்தாலும் இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை..
ஆனால் இப்படி தொடர்ந்து நடக்க என்ன காரணம் என போலீஸ் ஷாம் விசாரணையில் இறங்குகிறார்.. இதனிடையில் இவரின் வீட்டுக்கே வந்து ஒருவர் இந்த கொலைகள் பற்றிய தகவல்களை மறைமுகமாக சொல்கிறார்.. அவரும் சிறிது நேரத்தில் கொல்லப்படுகிறார்..
இதனால் மேலும் குழம்பித் தவிக்கும் ஷாம் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
ஷாம், நிரா, வெண்பா, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜெ.ஆர்.மார்டின்..
வழக்கம் போல அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக ஷாம் ஸ்கோர் செய்கிறார்.. குழந்தை இல்லாத சூழ்நிலையில் மனைவிக்கு ஆறுதலாக இருக்கும் ஷாம் சபாஷ் பெறுகிறார்..
ஷாமின் மனைவியாக நிரா.. ஓகே..
2வது நாயகனின் ஜோடியாக வரும் வெண்பாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை.. ஆனாலும் சின்ன சீகளில் கூட ஸ்கோர் செய்கிறார் வெண்பா..
மனநல மருத்துவராக நிழல்கள் ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் பொருத்தமான தேர்வு.. தங்கள் கேரக்டர் மூலம் திரைக்கதைக்கு பலம் கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
இசை : சுந்தரமூர்த்தி கே.எஸ்
ஒளிப்பதிவு : கல்யாண் வெங்கட்ராமன்
இயக்கம் : அரவிந்த் ராஜகோபால்
தயாரிப்பு : பெஸ்ட் மூவிஸ் – தனசண்முகமணி
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி : பாடல்களும் பின்னணி இசையும் விறுவிறுப்புக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன்.. : விறுவிறுப்புக்கு ஏற்ப பல கேமரா ஆங்கிள்களை வைத்து படமாக்கி சுவாரசியம் ஏற்படுத்தி இருக்கிறார்..
கதை எழுதி இயக்கியிருக்கும் அரவிந்த் ராஜகோபால்.. : ஜப்பான் மன்னன் கதையில் படத்தை தொடங்கி அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப திரைக்கதையில் நுழைத்திருக்கிறார் இயக்குனர்..
ஜப்பான் மன்னன் பற்றிய ஒரு கதையில் தொடங்கி விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால்.
வழக்கு விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் நாயகன் குழம்பிய நிலையில் வில்லன் மூலம் விடை கொடுத்து திரில்லர் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால்.
Asthram movie review

