டெக்ஸ்டர் விமர்சனம்… புறாவுக்கு ஒரு அக்கப்போரா.?
டெக்ஸ்டர் விமர்சனம்… புறாவுக்கு ஒரு அக்கப்போரா.?
ஸ்டோரி…:
நாயகன் ஆதி.. ஆறடி உயரம்.. கம்பீர தேகம் எந்த பிரச்சினைக்கும் செல்ல மாட்டார்.. ஆனால் பிரச்சனை வந்தது என்றால் அடித்து தூள் கிளப்பி விடுவார்.. கோபக்கார இளைஞரான இவரை யாமினி காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் யாமினி இல்லாத சூழ்நிலையில் பைத்தியம் பிடித்தவன்போல் ஆகிறார்..
இந்த சூழ்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு ஒரு சைக்கோ கொலைகாரன் தான் காரணம் என்பதை தெரிந்து கொள்கிறார்..
சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள்..
அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் நாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடடூரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா ? என்பதே மீதிக்கதை..

நடிகர்கள்
——————–
ராஜீவ் கோவிந்த் (கதாநாயகன்)
அபிஷேக் ஜார்ஜ் (கதாநாயகன்)
யுக்தா பெர்வி (கதாநாயகி)
சித்தாரா விஜயன் (கதாநாயகி 2)
ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன்
வில்லன் ஹீரோ எந்த வேடம் என்றாலும் தன்னால் ஸ்கோர் செய்ய முடியும் என நிரூபித்து இருக்கிறார் நாயகன் ராஜீவ் கோவிந்த்.. ஆனல் படம் முழுக்க சீரியஸான கேரக்டரில் வந்து செல்கிறார்.. ரொமான்ஸ் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை..
யுக்தா & சித்தாரா பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தில் நிறைவு.. பல படங்களில் மிரட்டும் ஹரிஷ் பெர்ராடி இந்த படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு –
ஆதித்ய கோவிந்தராஜ்
இசை- ஸ்ரீநாத் விஜய்
பாடல்கள்- மோகன்ராஜன்
படத்தொகுப்பு-
ஸ்ரீனிவாஸ் பி.பாபு
மக்கள் தொடர்பு -வெங்கட்
கதை – சிவம்
தயாரிப்பு -பிரகாஷ் S.V
திரைக்கதை வசனம் இயக்கம்-
சூரியன்.G

பாடல்கள் / பாடியவர்கள்
————————–
யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ…….. ஸ்வேதா மோகன்
மிளிரும் பின்னாலி
சுழலும் விழிகாரி……. சத்ய பிரகாஷ்
இந்த புறாவுக்கு ஒரு அக்கப்போரா என்பது போல இந்த சின்ன பிரச்சனைக்கு இத்தனை பழிவாங்கலா என்ற கேள்வி எழுகிறது..
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.. ஆனால் இன்னும் கூடுதல் ட்ரீம் செய்திருக்கலாமே எடிட்டர் என்ற கேள்வியே எழுகிறது..
சூரியன் என்பவர் இயக்கி இருக்கிறார்.. வழக்கமான பழிவாங்கல் கதையை சுவாரசியமே இல்லாமல் கொடுத்திருக்கிறார்..
Dexter movie review

