டிராகன் விமர்சனம் – 4.5/5.. பொறுக்கிய ரசிப்பாங்க.. பொறுப்பானவன கட்டிப்பாங்க
டிராகன் விமர்சனம் – 4.5/5.. பொறுக்கிய ரசிப்பாங்க.. பொறுப்பானவன கட்டிப்பாங்க
‘டிராகன்’ தலைப்ப பார்த்தா இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு. அப்படி என்ன இருக்கு அப்படி நீங்க கேட்டீங்கன்னா? ரொமான்ஸ் இருக்கு.. டான்ஸ் இருக்கு.. ஆக்சன் இருக்கு செண்டிமெண்ட் இருக்கு.. மெசேஜ் இருக்கு.. இப்படி நிறைய இருக்கு… அதனால நீங்க வீட்ல இருக்காம இந்த படத்தை முதல்ல பார்க்கலாம்…
டி. ராகவன் என்ற பெயர் கொண்ட பிரதீப்புக்கு ‘டிராகன்’ என்ற பெயர் எப்படி வந்தது? என்பதற்கு விளக்கம் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஸ்டோரி…
பள்ளியில் படிக்கும்போது முதல் மாணவனாக திகழ்கிறார் பிரதீப்.. தன் சக மாணவியிடம் அவளை காதலிப்பதாக சொல்லும்போது.. “உன்னை போன்றவர்களை பெண்ணுக்கு பிடிக்காது.. கெத்து காட்டும் பொறுக்கி மாணவர்களே தான் பெண்கள் விரும்புவார்கள் என்று அவள் சொல்ல.. இனி நல்ல மாணவனாக திகழக் கூடாது.. கெட்ட மாணவனாக கல்லூரிக்குள் நுழைகிறார் பிரதீப்.
அவள் சொன்னதைப் போலவே.. டிராகனாக கெத்து கெத்து காட்டும் பிரதீப்பை சுற்றி சுற்றி காதலிக்கிறார் நாயகி அனுபமா.. இன்ஜின் வரலாற்றில் முதல்முறையாக 48 அரியர்களுடன் மாஸ் காட்டுகிறார்..
இன்ஜினியரிங் படிப்பு முடிந்து 2 வருடம் ஆனாலும் ஊர் சுற்றி சரக்கு அடித்து பெற்றோரை ஏமாற்றி படிப்பை முடிக்காமல் பொறுப்பற்ற பிரதீப்பை வெறுக்க ஆரம்பிக்கிறார் அனுபமா.. இனியும் உன்னை காதலிக்க முடியாது.. நான் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லிவிட்டு பிரேக் அப் செய்கிறார் நாயகி.
இதன் பிறகு என்ன நடந்தது? இவர் திருந்தினாரா அல்லது மீண்டும் டிராகனாகவே கெத்தாக வாழ்ந்தாரா? அரியரை கிளியர் செய்தாரா?என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
கோமாளியில் இயக்குனர் லவ் டுடே படத்தில் இயக்குனர் ஹீரோ.. ஆனால் இந்த டிராகன் படத்தில் முழு அவதாரமாக ஹீரோவாகவே டிராகனாகவே கெத்து காட்டியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.. பாட்டு ஃபைட்டு சைட்டு என ரணகளம் செய்திருக்கிறார் பிரதீப்..
முதல் காதலி அனுபமா & இரண்டாம் காதலி கயாடு லோஹர்.. இருவரிடமும் தன்னை ரொமான்டிக் ஹீரோவாகவும் அடையாளம் காட்டியிருக்கிறார்.. எந்த ஹீரோயினை ரசிப்பது என் நம்மை கன்ஃபியூஸ் செய்கிறார்கள் அனுபமா & கயாடு லோஹர்.
அனுபமா அழகு என்றால் கயாடு லோகர் பேரழகு.. கவர்ச்சியிலும் நம்மை சூடேற்றுகிறார்..
பிரதீப் நண்பர்களாக வருபவர்களும் குட்டி டிராகனாக வருபவரும் அசத்தல நடிப்பை கொடுத்துள்ளனர்.
பிரின்ஸ்பால் மிஷ்கின்.. ஆபீஸ் மேனேஜர் கௌதம் மேனன்.. பிரதீப்பின் பெற்றோர் மரியம் ஜோர்ஜ் மற்றும் கேஎஸ் ரவிக்குமார், தேனப்பன் உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்கள் முத்திரையை பதிக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…
லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். ‘ரைஸ் ஆப் டிராகன்’ என்ற என்ற பாடல் இனி பல கல்லூரிகளில் ஒலிக்கும்.. வழித் துணையே என்ற பாடலும் நம் மனதை விட்டு நீங்காது.. ஒளிப்பதிவு 10 வருட காலகட்டங்களை அழகாக தன்னுடைய கேமரா ஆங்கிளில் படம் பிடித்திருக்கிற ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி..
பிரதீப் இ ராகவ் என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த காட்சி தேவையில்லாதது என்று எதையுமே சொல்ல முடியாத அளவுக்கு ட்ரீம் செய்து கலர்ஃபுல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்..
படிக்காவிட்டாலும் பாஸ் ஆகாவிட்டாலும் ஃபிராடு செய்து தீய வழியில் முன்னேறி விடலாம் என்று திட்ட போடும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம்.. இரண்டு மணி நேரம் கலகலப்பாக கொண்டு சென்று கடைசி 20 நிமிடத்தில் நம்மை கலங்கடிக்க செய்திருக்கிறார் இயக்குனர்..
பெரும்பாலும் கமர்சியல் படங்களில் வசனங்கள் பெரிதாக கவனிக்க வைக்காது.. ஆனால் இதில் கிளைமாக்சில் போல நம் மனதை கலங்கடிக்கும் வசனங்களை கொடுத்து கண்கலங்க வைத்து விட்டார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
ஒரு தப்பு நம்ம வாழ்க்கையை நல்ல விதமா மாத்தும்னா.. அந்தத் தப்பைச் செய்வதில் தப்பே இல்லை..” என்ற வசனத்தை இரண்டு இரண்டு வெவ்வேறு சீன்களில் பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார்.. இப்படி நம்மை கெட்ட வழியில் செல்வது போல சொல்லி.. அதே வசனத்தை கொஞ்சம் மாற்றி “நாம் செய்யும் தப்பு அடுத்தவர்களைப் பாதிக்கும்னா அதைச் செய்யவே கூடாது” என்ற வசனத்தை சொல்லி நம்மை நல்வழிப்படுத்துகிறார் இயக்குனர்..
திறமையற்ற மாணவன் தீய வழியில் முன்னேறி செல்லும்போது அது நல்ல மாணவனை கெடுக்கும்.. அது போல போலி சான்றிதழ் ஏதோ ஒரு நல்ல மாணவனின் எதிர்காலத்தையும் கெடுக்கும் என்பதை சொல்லி சோஷியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.. அதற்கு தன் கேரக்டர் மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்..
சொசைட்டிக்கு தேவையான சோசியல் மெசேஜை கமர்சியலுடன் கலந்து சொல்லி இருக்கிறது தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ்.
ஆக இந்த டிராகன்.. பொறுக்கிய ரசிப்பாங்க.. பொறுப்பானவன கட்டிப்பாங்க.!
Dragon movie review

