நேசிப்பாயா விமர்சனம்… 3/5

நேசிப்பாயா விமர்சனம்… 3/5

 

நேசிப்பாயா விமர்சனம்… 3/5

 

ஸ்டோரி…

ஆகாஷ் முரளியின் முன்னாள் காதலி அதிதி ஷங்கர்.. இவள் போர்ச்சுகல் நாட்டிற்கு சென்ற போது அங்கு ஒருவரை கொன்று விட்டதாக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார்.

இதனை அறியும் முன்னால் காதலன் ஆகாஷ் போர்ச்சுகல் நாட்டிற்கு சென்று அங்குள்ள வக்கீல் உதவியுடன் மீட்க போராடுகிறார்.

போர்ச்சுகல் நாட்டில் பெரும் தொழிலதிபரான சரத்குமார் – குஷ்பு தம்பதியரின் மூத்த மகனைதான் அதிதி கொன்றார் என்பதை அறிகிறார்.

உண்மையில் அதிதி கொன்றாரா? சரத்குமார் குஷ்பூவை மீறி அதிதியை நிரபராதி என நிரூபித்தாரா ஆகாஷ்? காதலர்கள் இணைந்தார்களா? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் அறிமுகமான முதல் தமிழ் படம் இது.. அவர் அறிமுக நடிகர் என்ற ஒரு துளி கூட தெரியவில்லை என்பதே சிறப்பு… ஆக்சன் ஆகட்டும்…. கோவம் ஆகட்டும் என அனைத்திலும் ஆகாஷ் அசத்தல்.. ஆனால் ரொமான்ஸ் இன்னும் மெனக்கடல் தேவை..

இவரின் சில முகபாவனைகள் இவரது தந்தை முரளியை நினைவுபடுத்துகிறது. அதுபோல இவரது குரலும் அதர்வாவின் குரல் ஒத்துப் போகிறது.. ஒருவேளை அதர்வா டப்பிங் கொடுத்தாரா ??

விருமன் மற்றும் மாவீரன் ஆகிய படங்களில் எதார்த்த பெண்ணாக வந்த அதிதி இதில் மாடர்னாக கலக்கியிருக்கிறார்.. க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்கிறார்..

அதிதி பெற்றோர் & ஆகாஷ் பெற்றோர் ஆகியோர் ரசிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

அதுபோல சரத்குமார் குஷ்பூ ராஜா உள்ளிட்ட அனைவரும் தங்களது அனுபவ நடிப்பில் கவர்கின்றனர்.. ஆனால் ஒரு சீனியர் நடிகர் சரத்குமார் இந்த கேரக்டர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்… அழகான மனைவி குஷ்பு இருந்த போதும் ஆசை நாயகியை வைத்துக் கொண்டு அவளையே தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க அப்பா கேரக்டரை எப்படி செய்தார்.?

 

டெக்னீசியன்ஸ்…

பில்லா ஆரம்பம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் இந்த நேசிப்பாயா படத்தை இயக்கியிருக்கிறார்..

இந்த ‘நேசிப்பாயா’ படத்தில் நேசிக்கும் அளவுக்கு பாடல்களை திகட்ட திகட்ட கொடுத்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா… ஆக்ஷன் காட்சியில் பின்னணி இசையில் மிரள விட்டிருக்கிறார்..

போர்ச்சுகல் நாட்டில் அழகை ரசிகர்கள் போற்றும் அளவுக்கு கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன்.. சேசிங் மற்றும் ஆக்‌ஷன் சீன்ஸ் செம..

திரைக்கதைக்கு சுவாரஸ்யம் காட்சிகளை தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஏ.ஸ்ரீகர்பிரசாத்.

வெளிநாட்டு செல்லும் நாயகி.. அவரை காப்பாற்றும் நாயகன் என்ற என்ற சாதாரண கதையை கொஞ்சம் ஈகோ கலந்து காதல் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.

ஆக நேசிப்பாயா.. ஈகோ காதல்..

Nesippaya movie review