தருணம் விமர்சனம் 4/5…
தருணம் விமர்சனம்.. 4/5…
ஸ்டோரி…
போலீஸ் கிஷன் தாஸ் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.. இந்த காலகட்டத்தில் அவருக்கு பெண் பார்க்க.. தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் என்பதை மறைத்து குடும்ப பிசினஸை கவனிப்பதாக பொய் சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் ஸ்மிருத்தியும் கிஷனும் சந்திக்க அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர்.
ஸ்மிருத்தியின் பாய் ப்ரெண்ட் ராஜ் ஐயப்பா காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் அதனை நிராகரிக்கிறார் நாயகி ஸ்மிருத்தி.. நீ நல்லவன் என்று நினைக்கும் கிஷன் உண்மையில் பிசினஸ் செய்யவில்லை அவன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் என்பதை சொல்லி நான் உன்னை நிஜமாக காதலிக்கிறேன் உண்மையானவன் என நெருங்குகிறார்..
இதனால் நாயகன் கிசனை வெறுக்கிறார் ஸ்மிருதி.. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் யாரும் இல்லாத தனிமை பயன்படுத்தி ஸ்மிருத்தியை கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைக்கிறார் பாய் ஃப்ரெண்ட் ராஜ் ஐயப்பா..
அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் பாய் ஃப்ரெண்ட் ராஜ் ஐயப்பாவை கொன்று விடுகிறார்.. அப்போது அவளை சந்திக்க வருகிறார் கிஷன்.. அதன் பிறகு என்ன நடந்தது? தான் கொலை செய்ததை காதலனிடம் சொன்னாரா அல்லது காதலன் மேல் பழியை போட்டாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாயகன் கிஷன் தாஸ்.. ரொமான்ஸ் ஆக்ஷன் என இரண்டிலும் கவருகிறார்.. கொலையை மறைக்க இவர் போடும் திட்டங்கள் போலீஸ் புத்தியை காட்டுகிறது அதுபோல நாயகனின் நண்பனாக வரும் பாலசரவணன் காமெடியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கலக்கியிருக்கிறார்..
தமிழ் சினிமாவுக்கு ஒரு ஸ்டைலிஷ் ஆனா வில்லன் கிடைத்திருக்கிறார் அவர்தான் ராஜ் ஐயப்பா.. பெரிதாக அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தியிருக்கிறார்…
பெரும்பாலும் குடும்ப பெண்ணாகவே வந்து ரசிகர்களை கவர்ந்த ஸ்மிருத்தி இதில் மாடர்ன் உடையில் வந்து ரசிகர்களை மயக்கி விடுகிறார்.. அவரது கண்களும் உதடுகளும் கூட கவிதை பேசுகிறது.. பயம் பதட்டத்தைக் கூட வார்த்தைகள் இல்லாமல் கண்களால் உணர்த்துகிறார்..
இவர்களுடன் ஸ்மிருதியின் அம்மா ஸ்ரீஜா ரவி மலையாளம் கலந்த அழகு தமிழில் பேசி நடிப்பில் கவர்கிறார்..
அட போலீசில் இப்படி நல்லவங்களா இருக்காங்களா என்கிற கேட்கும் அளவிற்கு இளையராஜா நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரது உடல் மொழி ஒரு போலீஸ்க்கு உரிய கம்பீரத்தை காட்டுகிறது.. இவர் படத்தின் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தவர்..
டெக்னீசியன்ஸ்…
தர்புகா சிவா இசையில் பாடல்கள் கவர்கின்றன.. இடைவேளைக்கு முன்பு வரை மட்டுமே பாடலை வைத்திருப்பது சிறப்பு..
ஆக்ஷன் காட்சியில் பின்னணி இசையை அதிரவிட்டிருக்கிறார் அஸ்வின் ஹேமந்த்.. பின்னணி இசை திரில்லர் ஜானருக்கான தன்மைக்கு ஏற்ப ரசிக்கும் தருணம்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி தருணம் காட்சிகளை அழகாக கொடுத்திருக்கிறார்..
தேஜாவு மற்றும் சட்டம் என் கையில் பட எடிட்டர் அருள் ஈ சித்தார்த் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்திருக்கிறார்.. காதலுக்கு பொறுமை அவசியம் என்பதை உணர்ந்து இடைவேளை வரை ரொமான்ஸ் சீன்களை அழகாக எடிட்டிங் செய்திருக்கிறார்.. ஆனால் இடைவேளைக்குப் பிறகு திரில்லருக்கு ஏற்ப கொஞ்சம் வேகம் கூட்டி இருக்கலாம்.. ஆனால் கடைசி அரை மணி நேரத்தில் வேகத்தை கூட்டி நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து விட்டார் எடிட்டர் அருள்..
தேஜாவு என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. முதல் பாதி முழுக்க முழுக்க ரொமான்ஸ் என கதையை நகர்த்திவிட்டு இரண்டாம் பாதியில் எவரும் எதிர்பார்க்காத வகையில் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட்..
தருணம் காதலுக்கு மட்டுமல்ல தருணம் என்பது நம் வாழ்க்கை எந்த விதத்திலும் மாற்றக்கூடும் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
Tharunam movie review

