ஃபேமிலி படம் விமர்சனம் 3.75/5.. ஃபேமிலி பாசம்.. ஃபேமிலிக்கான பாடம்

ஃபேமிலி படம் விமர்சனம் 3.75/5.. ஃபேமிலி பாசம்.. ஃபேமிலிக்கான பாடம்

 

 

ஃபேமிலி படம் விமர்சனம் 3.75/5.. ஃபேமிலி பாசம்.. ஃபேமிலிக்கான பாடம்

 

யு.கே. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஃபேமிலி படம்’.

ஸ்டோரி…

தாத்தா மோகனசுந்தரம்.. இவரது மகள் ஸ்ரீஜா ரவி.. இவரது கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்..

முதல் மகன் விவேக் பிரசன்னா ஒரு வக்கீல்.. இரண்டாவது மகன் பார்த்திபன் குமார் ஒரு பிபிஓ ஊழியர்.. மூன்றாவது மகன் உதய் கார்த்திக் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் கதைகளை சொல்லி தயாரிப்பாளரை தேடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு தயாரிப்பாளர் கதையை திருடி இவரை ஏமாற்றி விட்டார்.

அந்த குடும்பமே தங்கள் குடும்ப நபருக்காக தயாரிப்பாளராகி படத்தை எடுக்க தீர்மானிக்கின்றனர்.. அவர்கள் படத்தை தயாரிக்க முடிந்ததா? அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

டைனோசார் பட புகழ் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுபிக்ஷயா நடிக்கிறார். விவேக் பிரசன்னா, ஸ்ரீஜா ரவி, பட்டிமன்ற பிரபலம் மோகனசுந்தரம், ஜனனி, பார்த்திபன் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்..

ஒரு யதார்த்தம் இளைஞனாக நடுத்தர குடும்ப பையனாக கேரக்டரை உணர்ந்து நடித்து இருக்கிறார் உதய் கார்த்திக்.

பார்த்திபன் குமார் கச்சிதம்.. இவரது கேரக்டர் கொஞ்சம் கலகலப்புக்கு உதவி இருக்கிறது..

மூத்த அண்ணனாக விவேக் பிரசன்னா எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இப்படி ஒரு அண்ணன் தம்பி கிடைக்க மாட்டாரா என ஏங்கும் வகையில் இவர்களின் கேரக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.. ஒரே வீட்டில் ஒன்றாக சரக்கு அடிப்பதும் எவராவது பிரச்சனை செய்தால் அவர்களை போட்டு அடிப்பதும் என அசத்தியிருக்கின்றனர்.

அண்ணன் தண்ணி அடிப்பது தெரிந்தும் அண்ணி அவரை அழைப்பதும் அதற்கான உரையாடல்களும் ரசிக்க வைக்கிறது.

அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி. இவர் 2000 படங்களுக்கு மேல் டப்பிங் செய்த கலைஞராக தன்னுடைய பேச்சில் அத்தனை கவனத்துடன் செயல்பட்டு இருக்கிறார். ஆச்சி மனோரமா, ஸ்ரீவித்யா வரிசையில் அம்மாவாக மனதில் இடம் பிடிப்பார்..

மகன்களின் எதிர்காலம் குறித்த பயம்.. தன் சம்பந்தியிடம் மகனை விட்டுக் கொடுக்காத இவரது சுபாவம் அழகு அம்மாவாக ஜொலிக்கிறார்.

மூன்று நாயகர்களின் ஜோடிகளும் அழகாக ஒத்துழைத்து உள்ளனர்.

நாயகனின் நண்பராக அஜித் ரசிகராக நடித்திருக்கும் சந்தோஷ், காவல்துறை அதிகாரியாக காயத்ரி, நாயகனின் தாத்தாவாக பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

 

டெக்னீசியன்ஸ்…

கேடி கருப்புதுரை’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. நகரத்து பகுதிகளை அழகாக படம் பிடித்துள்ளார்..

அனிவி பாடல்களுக்கு இசையமைக்க, அஜிஷ் இப்படத்தின் பின்னணி இசையை அமைத்துள்ளார். ஆர் சுதர்ஷன் படத்தொகுப்பையும், நந்து கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர்.

இப்படத்தை இயக்கி இருக்கிறார் செல்வகுமார் திருமாறன்.. ஒரு உதவி இயக்குனராக இவரும் பல சிரமங்களை கடந்திருப்பார் என்று தெரிகிறது.. பல காட்சிகளில் எதார்த்தமான உணர்வுகளை வைத்து படத்தை ரசிகருடன் ஒன்றை வைத்து விட்டார் இயக்குனர்..

முக்கியமாக படத்தில் பல வசனங்கள் நம்மை கைதட்ட வைக்கிறது.. வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான் அப்படி என்றால் என்ன அர்த்தம்.. பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவனுக்கு பிரச்சினைகள் இருக்கும்.. அதுபோல கோடிகளில் லட்சங்களை சம்பாதிப்பவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப பிரச்சினைகள் இருக்கும்.. இப்படியான உலகில் யாரும் லைப்பில் செட்டில் ஆக முடியாது என்ற வார்த்தை கவனிக்க வைக்கிறது..

யாரோ ஒரு தயாரிப்பாளர் நம் குடும்பத்து நபரை நம்பி கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.. ஆனால் நம் குடும்பத்தின் நபர் மீது நமக்கே நம்பிக்கை இல்லை.. என்று அண்ணன் பேசி அந்தக் குடும்பமே ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆவது ரசிகர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும்..

ஆக இந்த ஃபேமிலி படம்.. ஃபேமிலி பாசம் ஃபேமிலிக்கான பாடம்..

Family Padam movie review
———-