சேவகர் விமர்சனம்.. சேவை தேவையா.?

சேவகர் விமர்சனம்.. சேவை தேவையா.?

 

 

சேவகர் விமர்சனம்.. சேவை தேவையா.?

ஸ்டோரி…

நாயகன் பிரஜின் தன் நண்பர்களுடன் இணைந்து ஊருக்கு பல சேவைகள் செய்து வருகிறார்.. மெடிக்கல் கேம்ப் நடத்துவது ஏழை எளியவர்களுக்கு உதவுவது.. எனவே அந்தப் பகுதி மக்களிடையே இவருக்கு செல்வாக்கு பெருகி வருகிறது.

இதனால் அரசியல்வாதிகளுக்கு கலக்கம் ஏற்படுகிறது.. இதனை எடுத்து மினிஸ்டரும் எம்எல்ஏவும் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து இவரை தீர்த்து கட்ட முடிவெடுக்கின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? அரசு அதிகாரிகளையும் அதிகார வர்க்கத்தினரையும் மீறி நாயகன் பிரஜினால் என்ன செய்ய முடிந்தது.? அவரால் சேவையை தொடர முடிந்ததா? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

சமீபத்தில் சில படங்களால் தான் பிரஜின் பிரகாசிக்க தொடங்கினார்.. ஆனால் இந்த சேவகர் படம் அவருக்கு எந்த ஒரு வாய்ப்பையும் பெற்று தராது என்றே சொல்லலாம்.. திரைக்கதையும் சரி அவரது நடிப்பும் சரி மோசம்..

மினிஸ்டர் ஆடுகளம் நரேன், போலீஸ் போஸ் வெங்கட் உள்ளிட்ட பல நடிகர்களும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. போஸ்-க்கு முன்பு விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஓவர் ஆக்டிங்.. தாங்கல..

டெக்னீசியன்ஸ்…

சண்டைக் காட்சிகள் அ உ டேய்… என்று அதிக சத்தம் மட்டுமே வருகிறது..

பல காட்சிகளில் வசனங்கள் உதட்டில் கூட ஒட்டவில்லை.. ஒரு வசனம் பேசப்பட்டிருக்கும் கொண்டு போதே அடுத்த வசனமும் இடையில் வருகிறது.. இப்படியாக பல காட்சிகள் டப்பிங் எடிட்டிங் எதுவும் சரி இல்லை.. முக்கியமாக படத்தின் இசை படுமோசம்.. காட்சிக்கும் இசைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. பாடல்களும் எதுவும் மனதில் ஒட்டவில்லை..

ஆக்சன் ரியாக்சன் சார்பாக ஜெனிஸ் இந்த படத்தை வெளியிடுகிறார்.. அவரின் தேர்வு இந்த முறை தவறிவிட்டது..

கேரளாவை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர் அவர்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது..

ஆக எந்த விதத்திலும் சேவகர் ரசிகர்களுக்கு திருப்தி தராது.. இந்த சேவை இனி தேவையா என்று ரசிகர்கள் கருத வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Sevakar movie review