ரஜினியைத் தாண்டி செஞ்சிட முடியாது..; ரஜினி – விஜய்யிடம் இருக்கும் ஒற்றுமை.. – எஸ். ஜே. சூர்யா

ரஜினியைத் தாண்டி செஞ்சிட முடியாது..; ரஜினி – விஜய்யிடம் இருக்கும் ஒற்றுமை.. – எஸ். ஜே. சூர்யா

 

ரஜினியைத் தாண்டி செஞ்சிட முடியாது..; ரஜினி – விஜய்யிடம் இருக்கும் ஒற்றுமை.. – எஸ். ஜே. சூர்யா

 

 

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் நாளை அக்டோபர் 15ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

ஏற்கனவே ஜெயிலர் முதல் பாகம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.. எனவே நாளை திரைப்படத்தை வரவேற்க ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்..

இப்படத்தில் பணி புரிந்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ் ஜே சூர்யா சமீபத்தில் தன் பேட்டியில் ரஜினி குறித்தும் படம் குறித்தும் பேசியுள்ளார்.. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது…

ரஜினிக்கு வில்லனாக நான் நடிக்கிறேன்.. அவருடைய (வில்லன்) பாணி சாயல் எல்லோரிடத்திலும் இருக்கும்… அவரைத் தாண்டி யாரும் எதையும் செய்து விட முடியாது.. என்றார்..

மற்றொரு கேள்விக்கு நீங்கள் பணிபுரிந்த ரஜினி – விஜய் உள்ளிட்டோரிடம் நீங்கள் காணும் ஒரு தனித்துவம் (ஒற்றுமை) என்ன என்று கேள்வியாளர் கேட்டபோது அதற்கு..

டூட்டி ஒர்க் ஃபர்ஸ்ட்.. ரஜினி – விஜய் உள்ளிட்டவர்கள் அவர்களுக்கான வேலை டூட்டி என்று வந்துவிட்டால் அதற்கு தான் முதலிடம் கொடுப்பார்கள்.. தற்போது வேலை இருந்தாலும் தொழில் என்று வந்துவிட்டால் அர்ப்பணிப்போடு இருப்பார்கள்… அதனால் தான் அந்த சின்சியாரிட்டி அவர்களை இன்று முதலிடத்தில் வைத்துள்ளது..” என பதில் அளித்தார் எஸ் ஜே சூர்யா..

 

S J Surya reveals unique characters of Actor Rajini and Cm Vijay

Related articles