சண்டக்காரி விமர்சனம்.. 2.75/5 – விமலுடன் மோதாதே…

சண்டக்காரி விமர்சனம்.. 2.75/5  – விமலுடன் மோதாதே…

 

சண்டக்காரி விமர்சனம்.. விமலுடன் மோதாதே…

 

 

ஸ்டோரி…

லண்டனில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார் ஸ்ரேயா.. அவருக்கு கீழ் உதவியாளராக வேலைக்கு சேர்கிறார் விமல்.. ஆனால் அந்த திமிரான ஸ்ரேயாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஓடிவிடுவார் என அந்த நிறுவன ஊழியர்கள் நினைக்கின்றனர்..

தன் ஆப் டெவலப்மெண்ட் காரியத்திற்காக அனைத்தையும் தாங்கிக் கொள்கிறார்..

இந்த நேரத்தில் ஒரு கட்டத்தில் லண்டனில் விசா முடிந்த காரணத்தினால் ஸ்ரேயா இந்தியாவுக்கு செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்.. அப்போது விமலின் உதவியை கேட்கிறார் ஸ்ரேயா..

நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக நடித்தால் சில பிரச்சனைகள் தீர்க்கலாம் என்கிறார்.. அப்படி என்றால் தனக்கு சில காரியங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் விமல்..

அப்படி என்ன நிபந்தனை.? ஸ்ரேயாவின் நிபந்தனைக்கு விமல் ஒப்புக் கொண்டாரா என்பதெல்லாம் மீதி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

Vemal, Shriya saran, Punnagai poo Gheetha, Sathyan, Prabu, KR Vijaya, Rekha, Dhev khill, Uma padmanaban, Crane Manohar, Mahanathi Shankar

கிராமத்து இளைஞன் லண்டனில் ஒரு ஐடி கம்பெனியில் படும் பாட்டை நடிப்பில் மூலம் காட்டியிருக்கிறார் விமல்.. ஆனால் அவருக்கு சிட்டி பாய் விட கிராமத்து வேஷம் பக்காவாக பொருந்தி இருக்கிறது..

இதற்கு நேர் எதிராக ஸ்ரேயாவுக்கு கிராமத்து வேடத்தை விட சிட்டி லுக் அவருக்கு பர்பெக்ட்டாக அமைந்துள்ளது.. ஸ்ரேயாவுக்கு டப்பிங் கொடுத்தது யாரோ.? அவரது பல வசனங்கள் வார்த்தைகள் உதட்டில் ஒட்டவில்லை..

காமெடியன் சத்யன் கேரக்டர் படத்திற்கு உதவினாலும் சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்குகிறார்.. பிளாஷ்பேக்கில் பாட்டியாக வருகிறார் கே ஆர் விஜயா..

படம் ஆறு வருடத்திற்கு முன்பு ரெடி ஆகிவிட்டது.. எனவே அப்போது ஆண்ட அதிமுக அரசை கலாய்த்து படத்தில் சில வசனங்கள் இடம் பெற்றுள்ளது.. முக்கியமாக ஓபிஎஸ் நடத்திய தர்மம் யுத்தம் உள்ளது..

டெக்னீசியன்ஸ்…

Produced by : Punnagai Poo Gheetha
Banners: Boss Production Corporation
Written and Directed By : R.Madhesh
Cinematography: R.B.Gurudev
Music: Amrish
Editor: Dinesh ponraj
Art Director: Iyyapan
Stunt Director’s: Kannal Kannan
PRO – Sathish (AIM)

படத்தின் ஒளிப்பதிவு படத்தின் இசையும் நேர்த்தியாக அமைந்துள்ளது.. அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. லண்டன் காட்சிகளுக்கும் கிராமத்து காட்சிகளுக்கும் வேறுபாடு காட்டப்பட்டுள்ளது..

விஜய் நடித்த மதுர படத்தை இயக்கியவர் மாதேஷ்.. அதிலும் கதைக்களம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கும்.. விஜய் ஒரு காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்வார்.. பிளாஷ்பேக்கில் கலெக்டர் ஆக இருப்பார்.

இந்தக் கதைக்களமும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கு.. இடைவேளை முன்பு வரை லண்டனில் கதை நகர்கிறது.. பிற்பாடு முழுவதும் ஒரு கிராமத்து கதையாக அமைக்கப்பட்டுள்ளது..

சண்டக்காரி என்பதால் படத்தின் ஹீரோயின் கேரக்டர் கதையோட்டம் புரிந்து விடுகிறது.. ஆனால் அந்த சண்டக்காரிக்குள்ளும் ஒரு சமாதான கேரக்டர் இருப்பதை பிளாஷ் பேக் காட்சியில் உணர வைத்து இருக்கிறார் இயக்குனர் மாதேஷ்..

த்ரிஷ்யம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘மை பாஸ்’.

இப்படத்தின் தமிழ் ரீ மேக்காக கடந்த 2019 ஆம் ஆண்டே உருவான படம் சண்டக்காரி… நாளை செப்டம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது..

 

Sandakaari movie review