நல்ல படம் விமர்சனம்.. நல்ல படம் டைட்டிலில்.. ஏமாறாதீங்க..!
நல்ல படம் விமர்சனம்.. நல்ல படம் டைட்டிலில்.. ஏமாறாதீங்க..!
ஸ்டோரி…
நாயகனுக்கு குடிகார கேரக்டர்.. மதுபான பார் வைத்திருக்கிறார்.. மேலும் மது பிரியர்கள் சங்கம் என நடத்தி வருகிறார்.. என்னதான் பணம் வசதி இருந்தாலும் குடி இல்லையேல் இவரது நண்பர்களும் இல்லை.. இவரும் இல்லை.. இப்படியாக ஊரை கெடுத்து வருகிறார்.. மதுபான கடைகள் விடுமுறை என்றால் முன்பே ஸ்டாக் வாங்கி வைத்து விடுவது இவரது வழக்கம்..
இப்படியான குடிகாரனையும் காதலிக்கிறார் மருத்துவ மாணவி நாயகி..
ஒருவேளை இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் இந்த குடிகாரர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் இடைவேளைக்கு பிறகான கதை..

கேரக்டர்ஸ்…
நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி..
நல்லவேளை ஹீரோ மீது எப்படி காதல் வந்தது என்ற காட்சிகள் எல்லாம் வைக்கவில்லை.. நாயகன் நாயகி காதலிப்பதாகவே காட்சிகள் தொடங்கி வருகிறது.. காதலிலும் சுவாரசியம் இல்லை எதிலும் சுவாரஸ்யம் இல்லாத காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்..
நாயகனின் நண்பனாக வரும் கல்கி கலக்கி இருக்கிறார்.. காமெடியும் செய்து கொஞ்சம் ஆறுதலாய் அமைந்திருக்கிறார்.. குடித்துவிட்டு பகலில் தூங்கும் போது சூரிய வெளிச்சத்தை பார்த்து லைட் ஆப் பண்ணுங்கப்பா என்கிறார்..
சாராயம் காய்ச்சுபராக மொட்ட ராஜேந்திரன் வருகிறார்.. அவர் வந்த பிறகும் காமெடி பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை…

டெக்னீசியன்ஸ்…
என்ன படம் பார்த்தீங்க என்று கேட்டால் நல்ல படம் என்று சொல்வார்கள் என்று நினைப்பில் நல்ல படம் என தலைப்பு வைத்திருக்கிறார்.. ஆனால் எந்த விதத்திலும் இது நல்ல படம் இல்லை..
சகிஸ்னா சேவியர் இசை அமைத்திருக்கிறார்.. இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..

பிரபு ராம் என்பவர் இயக்கி இருக்கிறார்..
நட்பு காதல் எல்லாம் சுவாரசியமானது.. அதை கூட அழகாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.. ஒரு குடிகாரனால் குடும்பத்தின் நிலை என்னவாகும் அவன் சுயநலவாதி என்பது போல் பல காட்சிகள் இருந்தாலும் எதுவும் ஒரு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை..
நாட்டில் மதுவிலக்கு வந்தாலும் குடிகாரர்கள் ரெடியாக இருக்க வேண்டும்.. கொரோனா லாக்டவுன் காலத்தில் குடிக்க வழி இல்லை.. அதுபோல நினைத்து குடிகாரன்கள் திருந்தினால் உண்டு என்பது போல காட்சிகளை முடித்திருக்கிறார்..
Nalla Padam movie review

