அமரம் விமர்சனம்

அமரம் விமர்சனம்

 

அமரம் விமர்சனம்…

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரித்துள்ள இந்த ‘அமரம்’ படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது..

அமர காவியம் என்பது போல் இந்த நினைத்து இந்த படத்தை எடுத்தாரோ என்னவோ தெரியாது… ஆனால் அமரம் என்றால் போர் என்ற பொருளும் உண்டு..

 

ஸ்டோரி…

ராஜன் தேஜஸ்வர் (அருகன்),
ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி),

ஜார்ஜ் மரியம் ஒரு கூலிப்படைத் தலைவன்.. இவரது உறவுக்கார பையன் ராஜன் தேஜஸ்வர்.. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சதி திட்டத்தின் பெயரில் நாயகி தந்தையை அவர் கண்முன்னே கொன்று விடுகிறார் நாயகன்..

எனவே நாயகனை தன் கையால் கொன்று பழி தீர்க்க வேண்டும் என சிங்க பெண்ணாக புறப்படுகிறார் நாயகி ஐரா..

ஒரு கூலிப்படையில் உள்ள ஒருவனை இவரால் தீர்த்த கட்ட முடிந்ததா.? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ராஜன் தேஜஸ்வர் (அருகன்)
ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி)
ஜார்ஜ் (மொசாட்)

நாயகனுக்கு ராஜன் தேஜஸ்வர் (அருகன்)
வித்தியாசமான அறிமுகம்.. காதல் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் அடித்து தூள் கிளப்பி இருக்கிறார்… காட்டுவாசி என்று சொல்லப்பட்டாலும் உடல் மொழியிலும் குரல் மொழியிலும் பெரிய வித்தியாசம் இல்லை.. நீண்ட தலைமுடி தாடியுடன் படம் முழுக்கவே திரிகிறார்..

கதை நாயகன் அவர் என்றாலும் கதையின் நாயகன் போல ஜார்ஜ் மரியம் இடைவேளை வரை நடிப்பில் மிரள வைக்கிறார்.. ஆனால் இடைவேளைக்குப் பிறகு இவரது கேரக்டரை பற்றி ஒரு கேரக்டர் கூட பேசவில்லை.. அதற்கான காட்சியும் இல்லை.

நாயகி ஐரா.. தன் தந்தையை நாயகன் கொல்ல என்ன காரணம் என தேடி அலைகிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் காரணம் என்ன என ஒருவர் சொல்ல முற்படும்போது அதைக் கூட கேட்காமல் அவரையும் கொன்று விடுகிறார் ஹீரோயின்.. என்னதான் நினைத்து படத்தை எடுத்தாரோ இயக்குனர்..

சாய் தீனா (விஜயன்)
நாகிநீடு (ஏகலைவன்)
கல்கி ராஜன் (பாண்டு)
ஹரிஷ் பெராடி (சால்வா)
வாசுதேவன் முரளி (தயா).

தோற்றத்தில் முரட்டுத்தனம் குணத்தில் நல்ல குணம் என சாய் தீனா சபாஷ் பெறுகிறார்.. கல்கி ராஜன் கலகலப்புக்கு படத்திற்கு பெரிதாக உதவி இருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள் :

பாடல்கள் – சௌந்தரராஜன். K

ஒளிப்பதிவு – பரத் குமார்

எடிட்டிங் – R. ஸ்ரீராமர்

கலை இயக்கம் – ஜனார்த்தனன்

ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்

நடனம் – பூபதி

தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி

மக்கள் தொடர்பு –
சதீஷ் குமார்,
புவன் செல்வராஜ்

தயாரிப்பு – C.R.ராஜன்.

Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவாளர் பரத் குமார்.. இதுவரை திரையில் நாம் அதிகம் பார்த்து ரசிக்காத கிழக்கு தொடர்ச்சி மலையை காட்டி இருக்கிறார்.. வறண்ட பூமியால் மக்களின் வாழ்க்கை தடம் மாறியதையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்..

இசை – மிக்கி ஜெ .மேயர்.. ஒட்டாரத்தி பாடல் ரசிக்க வைக்கிறது.. அதில் குளிர்ச்சியான மலைகள் கண்களுக்கு இதம்.. சண்டைக் காட்சிகளில் பின்னணி இசை மிரட்டல்..

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – திருஅருள் கிருஷ்ணா.. வழக்கமான பழிவாங்கல் கதையில் நாயகிக்கு வில்லனால் பிரச்சனை வரும்.. அதில் நாயகன் தீர்த்து வைப்பார். இதில் நாயகனை பழிவாங்க நாயகி புறப்படுகிறார்.. ஆனால் காரணம் தெரியாமல் காதல் கொள்கிறார்..

சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.. படத்தின் மேக்கிங் தரம் உயர்வாக உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெற்று இருக்கும் இந்த அமரம்..

 

Amaram movie review