வசூல் வேட்டையாடும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’..; ₹100 Cr ஹாட்ரிக் வெற்றியில் வெங்கி அட்லூரி
வசூல் வேட்டையாடும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’..; ₹100 Cr ஹாட்ரிக் வெற்றியில் வெங்கி அட்லூரி
சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தில் சூர்யா, மமீதாபைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டான்டன், மரியம் சார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் ரிலீசான 2 தினங்களில் ₹ 100 கோடியை வசூலித்துள்ளது என்பதை படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.. வரும் தினங்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என படக்குழு காத்திருக்கின்றனர்
சில மாதங்களுக்கு முன்பு வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ படம் 300 கோடி வசூலை அள்ளியது.. தற்போது இந்த படமும் இரண்டு தினங்களில் ₹ 100+ கோடியை கடந்துள்ளது.. எனவே சூர்யா தரப்பு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.. மேலும் வரும் தினங்களில் இந்த படம் இன்னும் வசூலை அள்ளும் என்று படக்குழுவினர் தரப்பில் காத்திருக்கின்றனர்..

வெங்கி அட்லூரி இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும் தமிழில் தனுஷின் வாத்தி, துல்கரின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.. வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் இந்த இரண்டு படங்களும் ₹ 100 கோடி வசூலை கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
தற்போது இந்த படமும் வெங்கி அட்லூரிக்கு வெற்றியை கொடுத்துள்ளது.. அதன்படி வெங்கி தமிழில் ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Vishwanath And Sons collected 100cr and running successfully

