லயோலான்னா கெத்து..; படிச்ச படிப்புடன் காலேஜ்ஜை சேர்த்து சொல்லுங்க.. – சூர்யா
லயோலான்னா கெத்து..; படிச்ச படிப்புடன் காலேஜ்ஜை சேர்த்து சொல்லுங்க.. – சூர்யா
சென்னையில் உள்ள பிரபல லயோலா கல்லூரியில் படித்தவர் நடிகர் சூர்யா… சமீபத்தில் அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் ரியூனியன் (முன்னாள் மாணவர்கள் சந்திப்பு) நடைபெற்றது.
அப்போது நடிகர் கலந்து கொண்டு சூர்யா பேசும் போது…
30 வருடங்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. என்னுடைய கல்லூரி வாழ்க்கையை மறக்க முடியாது.. என்னிடம் யாராவது நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் என் டிகிரியை மட்டும் சொல்வது கிடையாது.. நான் படித்த பிகாம் படிப்புடன் இணைத்து லயோலோ என்று தான் சொல்லுவேன்.. உங்களிடமும் இது போல யாராவது கேட்டால் நீங்கள் படித்த படிப்புடன் லயாலா கல்லூரி பெயரை இணைத்து சொல்லுங்கள்..
லயோலா என்றால் கெத்து.. என்னுடைய நெருங்கிய நண்பர் ராஜ்குமார் என்னுடன் படித்தவர்.. தற்போது அகரம் பவுண்டேஷன் உறுதுணையாக இருக்கிறார்.. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த என்னுடைய ஆசிரியர்கள் மாணவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என மகிழ்ச்சியாக பேசினார் சூர்யா..
Loyola is mass says Surya at College Alumni meet

