ONE MAN – உலகில் முதன்முறையாக எல்லா கேரக்டரும் டிபார்ட்மெண்ட்டும் ஒருவரே.. – சங்ககிரி ராஜ்குமார்
ONE MAN – உலகில் முதன்முறையாக எல்லா கேரக்டரும் டிபார்ட்மெண்ட்டும் ஒருவரே.. – சங்ககிரி ராஜ்குமார்
ஒரு சினிமா உருவாக தேவையான 50+ மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல் ஒரே ஆளாகச் செய்து ONE MAN ‘ஒன் மேன்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
இப்படம் ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது..
இது பற்றி சங்ககிரி ராஜ்குமார் கூறும்போது…
, “இதில் இடம் பெற்றுள்ள அத்தனை கதாபாத்திரங்களிலும் நானே நடித்திருக்கிறேன். படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே தோன்றுவார்கள்.
இவனிடம் இருந்து அவன் எப்படி தப்பிப்பான், அவனால் இவனுக்கு என்ன பிரச்சினை உள்ளட்ட ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக அமைந்துள்ளது..

இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ரயில் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி,உள்ளிட்டவை போன்றவை இடம்பெற்றுள்ளன..
சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் வியந்து மகிழ்ந்து என்னை பாராட்டினார்..” என்றார்..
One Man Sangagiri Rajkumar done all characters and Technical work

—

