ஆலன் விமர்சனம்… இலக்கிய காதல்
ஆலன் விமர்சனம்… இலக்கிய காதல்
ஸ்டோரி…
சிறு வயதில் ஒரு விபத்தில் தன் குடும்பத்தை இழந்த வெற்றி ஏதோ ஒரு விரக்தியில் காசிக்கு செல்கிறார்.. அங்கு ஆன்மீகம் மீது பற்று கொண்டாலும் சில வருடங்களில் அவரது தாத்தா மற்றும் அவரது குருவின் விருப்பப்படியும் இலக்கிய உலகிற்கு திரும்புகிறார்..
அங்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார்.. அந்தப் பெண்ணால் தன் வாழ்வில் மலர்ச்சி வந்ததைக் கண்டு மயங்கும் வேளையில் திடீரென ஜெர்மனி பெண் மரணமடைகிறார்.
அதன் பின்னர் வெற்றி வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதுதான் ஆலன் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
எட்டு தோட்டாக்கள் ஜீவி, பம்பர் என படத்திற்கு படம் வித்தியாச காட்டும் வெற்றி இதில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. சாந்தமான நடிப்பில் கவர்கிறார்.. ஆன்மீகம் சென்று திடீரென காதல் வயப்படுவதும் பின்னர் ஆன்மீகம் செல்வதும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.. ஆனால் இறுதியில் தனக்கு பிடித்த எழுத்துலகில்யில் தடம் பதிப்பது சிறப்பு..
மலையாள திரை உலகை மயக்கிய அனு சித்தாரா ‘ஆலன்’ படத்தில் இடைவேளைக்குப் பிறகே வருகிறார்.. இவர்தான் ‘பத்து தல’ படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்தவர்.. எதுவும் பேசாமலே கண்களால் கிறங்கடித்து விடுகிறார்.. இவரது குண்டான உடலை போல குண்டான கண்களும் ஏதோ செய்கிறது..
தமிழ் மொழி கலாச்சாரத்தை நேசிக்கும் ஜெர்மனி நாட்டு பெண்ணாக மதுரா.. மலர்ந்த முகம்.. ஜெர்மனி மொழி பேசுவதும் அழகு.. அதுபோல இந்திய பெண்ணாக சேலை கட்டும் காட்சியில் அழகிலும் கவர்கிறார்.. இவருக்கு நேர்ந்த கொடுமை இந்தியர்களுக்கு அவமானம்..
இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி ஆகியோரும் ஆலனுடன் இனைந்து இருந்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…
“நீ படித்தால் நீ மட்டுமே பயன்பெறுவாய்.. ஆனா நீ எழுதினால் அது இந்த உலகுக்கு பயன்படும்… ” என்ற வசனங்கள் படத்திற்கு பக்கபலம்..
ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின் பல காட்சிகளில் வியக்க வைக்கிறார்.. முக்கியமாக காசி, ரிஷிகேஷ் மற்றும் சென்னை பாண்டிச்சேரி காட்சிகளில் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.
மனோஜ் கிரியானாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.. பாடல் வரிகள் தெளிவாக புரியும்படியும் இருப்பது மிகச்சிறப்பு..
படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதன் தன் பணியில் கச்சிதம்..
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்..
முதலில் ஆன்மீகத்தை நோக்கி செல்லும் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்து காதல் என நகர்கிறது.. அதன் பின்னரும் ஆன்மீகம் என சென்று இலக்கிய காதலுடன் இணைகிறது..
மதுராவும் அணுவும் நாயகன் வெற்றிக்கு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருந்தனர் என்பதை புகைப்படத்துடனும் ரத்தக்கரை படிந்த கடிதத்துடனும காட்டி இருப்பதும் இயக்குனரின் புத்திசாலித்தனம்..
இது இலக்கியமா ஆன்மீகமா காதலா குடும்பமா என தெளிவில்லாமல் அனைத்தையும் கலந்து விருந்து படைக்க முயற்சித்து அதில் கொஞ்சம் மதிப்பெண் பெறுகிறார் இயக்குனர் சிவா ஆர்..
Aalan movie review


