போட்டோகிராபர் விமர்சனம்.. தங்க மரத்தை தேடிச் சென்ற கில்லாடி
போட்டோகிராபர் விமர்சனம்.. தங்க மரத்தை தேடிச் சென்ற கில்லாடி
ஸ்டோரி…
நரேன் – தேவி மகேஷ் இவர்களின் மகன் அஸ்ரப்.. தன் தந்தைக்கு பெரிய பிசினஸ் இருந்தாலும் தன் உழைப்பால் உயர வேண்டும்… தனக்கு ஆர்வமான போட்டோகிராபர் தொழிலில் முன்னேற வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்..
வயது 30 கடந்தாலும் காதலி இருந்தாலும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறான்..
தான் எடுக்கும் ஒரு போட்டோ சரித்திரத்தை சொல்ல வேண்டும் என முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.. அப்போதுதான் மதிக்கெட்டான் சோலை என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு தங்க மரம் இருக்கிறது என்பதை அறிகிறார்…
ஆனால் அந்த அடர்ந்து காட்டுக்குள் சென்றவர்கள் எவரும் உயிருடன் திரும்பியதில்லை என்பதால் எவரும் செல்ல மறுக்கின்றனர்.. அங்கு சென்றவர்களின் மதி கெட்டுவிடும் ஒரு பேச்சு உள்ளது.. ஆனாலும் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு மதி கெட்டான் சோலைக்கு செல்கிறார் நாயகன் அஷ்ரப்.
அதன்பிறகு என்ன நடந்தது.? அவர் தங்க மரத்தை கண்டுபிடித்தார்? அதனை தன் கேமராவில் பதிவு செய்தாரா? மீண்டும் உயிருடன் திரும்பி வந்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
அஷ்ரஃப் @ வீரா
ஜனனி சாமிநாதன் @ தர்ஷினி
கருணாகரன் @ கபிலன்
உரியடி சிவா @ மதி
ஆடுகளம் நரேன் @ செங்குட்டுவன்
தேவி மகேஷ் @ ஆதினி

அஷ்ரப்… முதல் படம் என்றாலும் முதல் முயற்சியில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.. சுத்தம் சுத்தம் என்று வாழும் இவர் ஒரு கட்டத்தில் காடுகளுடன் விரும்பி இவரது வாழ்க்கை எப்படி மாற்றுகிறது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.. நட்பு காதல் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம்..
ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் ஜனனி… இந்த படத்தின் நாயகி.. ஓரிரு காட்சிகளில் மட்டும் தலை காட்டி செல்கிறார்..
காட்டுக்குள் சட்ட விரோதமாக கஞ்சா வளர்க்கும் வில்லனும் மிரட்டலான தோற்றத்தில் கவர்கிறார்..
வேலராமமூர்த்தி, கருணாகரன், ஆடுகளம் நரேன், உரியடி சிவா உள்ளிட்டோர் கதைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

நாயகனுக்கு நிகராக சில காட்சிகள் வந்தாலும் தேவி மகேஷ் தாய் பாசத்தில் கவருகிறார்.. அவரது ஃப்ளாஷ் பேக் காட்சிக்கு கொடுக்கப்பட்ட ஒளி அமைப்பு ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தை காட்டுகிறது…
டெக்னீசியன்ஸ்…
*எழுத்து & இயக்கம் :* அஷ்ரஃப்
*தயாரிப்பு :* அப்துல் பாசித் சையத்
*வசனம் & பாடல்கள் :* பிரேமன்
*மக்கள் தொடர்பு :* ஸ்ரீ வெங்கடேஷ்
பைலட்டாக இருந்தவர் படம் எடுத்து இருக்கிறார்.. அவர்தான் அஷ்ரப்.. தன் தொழில் மீது தன்னுடைய லட்சிய பயணம் மீது ஆர்வமுள்ளவன் எந்த விஷயத்தையும் துணிச்சலுடன் செய்வான்.. அவனுக்கு எல்லை இல்லை என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.. இவரே நாயகன் இவரை இயக்குனர் என்பதால் படம் முழுக்க இவரது ஆக்கிரமிப்பு தெரிகிறது ஆனால் அதற்காக பில்டப் காட்சிகள் எதுவும் இல்லாமல் எதார்த்தமாகவே தன்னுடைய முழு முயற்சியை கொடுத்திருக்கிறார்..

அடர்ந்த காடு என்றால் பல மிருகங்கள் கொடிய மிருகங்கள் இருக்கும்.. அதையும் கொஞ்சம் காட்டி இன்னும் பயத்தை உண்டாக்கி இருக்கலாம்.. மாறாக புலி சிலந்தி உள்ளிட்டவையே காட்டப்படுகிறது.
*ஒளிப்பதிவு :* ரயீஸ் அஹ்மத்
*இசை :* ராஜ்குமார் சந்திரசேகரன்
*படத்தொகுப்பு :* RC பிரணவ்
படத்தின் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தங்கள் பணியை வெகு சிறப்பாக செய்துள்ளனர்..

காட்டை காப்பாதிக்க காட்டுக்கு தெரியும்.. மனுசங்க சும்மா இருந்தா போதும்… காட்டில் மிருகங்களை விட சட்ட விரோதமாக நுழையும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்ற வசனம் மூலம் வசனகர்த்தா கவர்கிறார்..
மேலும் இம்மானுஷ்… கடவுள் ஒளி.. கோல்டன் ட்ரீ.. என சுவாரஸ்யமான சம்பவங்களையும் இணைத்திருக்கிறார்..
அப்பாக்கள் தன் ஆசையை பிள்ளையிடம் திணிப்பார்கள்.. ஆனால் அம்மாக்கள் பிள்ளைகளின் ஆசையை அவர்களுக்குள் திணித்து முன்னேற செய்வார்கள் என்ற கருத்தையும் அழகாக தாய் பாசத்துடன் சொல்லி இருக்கிறார் அஷ்ரப்..
Photographer movie review

