I Nobody (நான் யாருமில்லை.) விமர்சனம் 4.5/5.. த்ருஷ்யம் ஸ்டைலில் அடுத்த அதிரடி
I Nobody (நான் யாருமில்லை.) விமர்சனம் 4.5/5.. த்ருஷ்யம் ஸ்டைலில் அடுத்த அதிரடி
ஸ்டோரி…
அரசு அதிகாரி பிரித்திவிராஜ்.. இவரது மனைவி பார்வதி.. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.. ஒரு நாள் பேங்க் ஒன்றுக்கு செல்கிறார் பிரித்திவிராஜ் அப்போது அங்கு சில கொள்ளையர்கள் வந்து பேங்கை கொள்ளை அடிக்க முயற்சிக்கின்றனர்.. பிரித்வியை பிணைய கைதியாக வைத்துக்கொண்டு அவர்கள் மிரட்டுகின்றனர்.. அவர்கள் கொள்ளையடித்து விட்டு செல்லும் போது ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு விபத்தில் மூவரும் இறந்து விடுகின்றனர்
ஆனால் அவர்கள் கொள்ளையடித்த ₹ 17 கோடி எங்கே சென்றது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை… இதனால் போலீசின் சந்தேக பார்வை பிரித்திவிராஜ் மீது திரும்புகிறது..

அதுவே இவருக்கு பிரச்சனை ஆகிறது.. உன் பெண் குழந்தைகளை ஏதாவது செய்து விடுவேன் என பள்ளி மாணவர்கள் கூட மிரட்டுகின்றனர்.. இதனால் ப்ரித்வி பணம் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிறது..
அப்படி என்றால் கொள்ளையடித்த மொத்த பணம் இவரிடம் இருக்கிறது என பல ரவுடிகளும் மிரட்ட ஆரம்பிக்கின்றனர்..
இறுதியில் என்ன ஆனது.? பணம் இவரிடம் இருந்ததா? இல்லையென்றால் ₹ 17 கோடி பணம் என்னாச்சு.? இதன் பின்னணியில் யார் என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரில்லர் திரைக்கதை..

கேரக்டர்ஸ்..
பிருத்விராஜ் சுகுமாரன் – ராஜீவன்
பார்வதி திருவோத்து – மீரா
மதுபால் – சிஐ ஜோமோன்
சங்கர் ராமகிருஷ்ணன் – Dysp அஜித்
நக்ஷத்ரா – ஜியா
ஒட்டுமொத்த படத்தையும் ஒருவனாக தாங்கி நிற்கிறார் பிருத்விராஜ்.. ராஜீவன் கேரக்டரில் நடிப்பு ராஜாங்கம் நடத்தி இருக்கிறார்.. மனைவி பார்வதியுடன் பிரச்சனை குழந்தைகளிடம் பாசம்.. வெளியே சிக்கல் என அனைத்தையும் முகபாவனைகளால் பிரதிபலிக்கிறார்..
கணவனுடன் கருத்து வேறுபாடு.. எனவே குழந்தைகள் முக்கியம் என சிங்கிள் உமனாக போல கெத்து காட்டியிருக்கிறார் பார்வதி.. இவர்கள் இரண்டு குழந்தைகளும் நடிப்பிலும் அழகிலும் வெளுத்துக்கட்டி இருக்கின்றனர்.. அப்பாவித்தனமாக செய்தாலும் அதிலும் மழலை கலந்து அவர்களின் நடிப்பு பாராட்டுக்குரியது..
ஹக்கிம் ஷாஜகான் – அனஸ்
அசோகன் – ஜேக்கப்
விஜயராகவன் – முதல்வர்
சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் தந்திர கால போலீசாக ஹக்கீம் ஷாஜகான் நடிப்பில் பின்னிஎடுத்து இருக்கிறார்.. நாம் பார்க்கும் மாமூல் போலீஸ் போலவே இருக்கிறார்.
செக்யூரிட்டியாக வரும் அசோகன் நடிப்பில் மிரள வைக்கிறார்.. முதலில் பிரித்விக்கு எதிராக பின்னர் அவருக்கு பக்கபலமாக தன்னுடைய கேரக்டரில் ஜொலிக்கிறார்..
முதல்வர் விஜயராகவனும் ஒரு யதார்த்த மக்கள் தலைவராக வாழ்ந்திருக்கிறார்.. நான் ஆட்சியில் இருக்கும் வரை இந்த போலீஸ் தன் கண்ணில் படக்கூடாது என்று சொல்லிவிட்டு கெத்தாக செல்கிறார்.

டெக்னீசியன்ஸ்…
இயக்குநர் : நிசாம் பஷீர்
தயாரிப்பாளர்கள் : சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி
எழுத்தாளர் : சமீர் அப்துல்
ஒளிப்பதிவாளர் : தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பாளர் : ரமீஸ் எம்.பி.
இசை : ஜேக்ஸ் பிஜாய்
இதுபோன்ற சஸ்பென்ஸ் கதைக்கு இசை முக்கியம் என்பதை ஒவ்வொரு காட்சியில் உணர வைத்திருக்கிறார்.. தேவையான இடங்களில் மட்டும் இசையை கொடுத்து நம்மை பதட்டத்துடன் அமர வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்..
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. பல சீன்களைப் பாராட்டினாலும் லிப்டில் நடக்கும் அதிரடி சண்டைக்காட்சி ஹைலைட்.. அதற்குள் எப்படி கேமராவை பொருத்தி எப்படி படமாக்கி இருப்பார்? எனவே வியக்க வைக்கிறார்.. அதுபோல ஓடிக் கொண்டிருக்கும் பஸ்ஸில் பிரிதிவி போடும் பைட் பின்னி எடுத்திருக்கிறார் சண்டை இயக்குனர்.. (சண்டைப்பயிற்சி : யானிக் பென், கலை கிங்சன் & அமித் ஜாலி பாஸ்டின்)

நாயகன் பிரித்திவி கண்ணில் அடிபட்ட காட்சி.. அதில் மேக்கப் கூட அவ்வளவு எதார்த்தமாக ரியலாக அமைந்துள்ளது..
வித்தியாசமான திரைக்கதைகளை யோசிப்பதில் மலையாளிகள் கில்லாடிகள் என்பதை ஒவ்வொரு படமும் உணர்த்தி வருகிறது.. சூப்பர் மேன் என்று ஹைடெக் கதைகளை யோசிக்காமல் மக்களுடன் கனெக்ட் ஆகும் கதைகளை வடிவமைப்பதில் இயக்குனர் நிசாம் பஷீர் சிக்ஸர் அடித்திருக்கிறார்..
கணவன் – மனைவி கருத்து வேறுபாடு.. விவகாரத்துக்கு காத்திருக்கும் தம்பதிகள்.. மனைவிக்கு வேறு ஒரு மீது காதல்.. இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை.. குழந்தைகளின் நிலை.. இப்படி குடும்பத்தையும் இந்தத் திரில்லர் திரை கதைகள் கொண்டு வந்து (நான் யாருமில்லை) என்ற திரை கதையை பலமாக வடிவமைத்திருக்கிறார்..
அதுபோல பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடும் போலீஸ் அவரது மச்சான்.. இப்படியும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்து விட்டார் இயக்குனர் நிசாம் பஷீர்..
கலை : அர்ஷத் நக்கோத்
ஆடை வடிவமைப்பு : தன்யா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
I No Body movie review

