லட்சுமி காந்தன் கொலை வழக்கு விமர்சனம்…

லட்சுமி காந்தன் கொலை வழக்கு விமர்சனம்…

 

லட்சுமி காந்தன் கொலை வழக்கு விமர்சனம்…

 

இது தொடர்பான வழக்குக்கும் இந்த கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.. தமிழகத்தில் உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கு என்ற தலைப்பு வைக்கப்பட்டால் ரசிகர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த தலைப்பை இயக்குனர் வைத்திருப்பார் என்று நம்புவோம்..

 

Every prison wall has a story to tell. This is n(one) of that.. A young man convicted of murder awaits execution, while a conflicted judge, an aging hangman, and a morally torn jailer confront the weight of justice, guilt, and humanity in the final hours before dawn.

ஸ்டோரி…

1970 காலகட்டங்களில் நடக்கும் கதை இது.. குடிகார தந்தை.. கடின உழைப்பாளி அம்மா இவர்களின் ஒரே மகன் வெற்றி.. படித்து முடித்து வயதானாலும் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்.. வீட்டில் அரிசி வாங்க கூட இயலாத நிலை.. வீட்டு பத்திரம் கூட வில்லன் கவிதா பாரதியிடம் இருப்பதால் அதையும் மீட்க முடியாத நிலையில் கடன் பட்டு கஷ்டப்படுகின்றனர்..

இந்த சூழ்நிலையில் நண்பர் மாறன் உதவியுடன் திருட்டு வேலைக்கு செல்கிறார் வெற்றி.. அதில் கொஞ்சம் காசு கிடைக்க அதையே தொழிலாக செய்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் நாயகி பிரிகிடாவுடன் காதல் கொண்டு அவரையே மணமுடிக்கிறார்..

இத்தனை நாள் சின்ன சின்ன திருட்டு செய்த நீங்கள் உங்கள் வீட்டு பத்திரத்தை திருடி வாருங்கள்.. அதன் பிறகு நாம் திருந்தி சந்தோஷமாக வாழலாம் என்கிறார்..

ரெட்டியார் கவிதா பாரதி வீட்டில் திருட சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு நியாயத்திற்காக கொலை செய்கிறார் வெற்றி.. அதன் பின்னர் அவருக்கு ஜெயில் தண்டனை கிடைத்து தூக்கு தண்டனை கைதி ஆகிறார்..

தூக்கு தண்டனை தேவையா.? ஒருவருக்கு தண்டனை கொடுப்பதால் இந்த சமூகத்தில் அடுத்த திருடர்களுக்கு திருந்துவார்களா.? பயம் உண்டாகுமா.? சமூகத்தில் மாற்றம் கிடைக்குமா.? தண்டனை தான் தீர்வா.? என பல விவாத சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்..

கேரக்டர்ஸ்…

Vetri – Arivumathi
Rangaraj Pandey – Sivanandhan
Brigida Saga – Mallika
Maaran – Moorthy
Saravanan – Sargunam
Lizzie Antony – Soodamani
Aruvi Madhan – Velmurugan
Kanya Bharathy – Annam
Subramaniam Siva – Dharman

தூக்கு தண்டனை கைதி வெற்றி.. இவர் தன்னுடைய சிறை அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதுகிறார்.. அதில் பல விவாத கேள்விகளாக தொடுக்கிறார்..

மரண தண்டனை அடுத்த குற்றங்களுக்கு ஒரு தீர்வு என்றால் இத்தனை காலம் மரண தண்டனை நாட்டில் கொடுக்கப்பட்டது ஏன்.? இன்னமும் தொடர்வது ஏன்? என பல கேள்விகளை எழுப்புகிறார்.. அவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் போலீஸ் ரங்கராஜ் பாண்டே..

வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே இருவரும் விவாத மேடையில் பங்கு கொள்வது போல மோதிக் கொள்கின்றனர் இது ஒரு சுவாரசியமான காட்சி..

கொஞ்ச நேரம் வந்தாலும் கொள்ளை அழகில் நம்மை ஈர்த்து விடுகிறார் பிரிகிடா.. வெற்றியின் அம்மாவாக லிசி ஆண்டனி.. பொறுப்பான அம்மா சகித்துக் கொள்ளும் மனைவியாக கவர்கிறார்..

குற்றவாளியை தூக்கில் போடும் நபராக சுப்பிரமணிய சிவா… மற்றொரு குற்றவாளியாக அருவி மதன்.. வட்டி ரெட்டியாராக கவிதா பாரதி ஆகியோரும் நடிப்பில் முத்திரை பதிக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

Producer – KV Shabarreesh
Banner – 2M Cinemas, D Pictures
Co-Producer, Story, Director – Dayal Padmanabhan
Screenplay & Dialogue – Kavitha Bharathy
Dayal Padmanabhan
Music and Background Score – Darbuka Siva
DOP – M.V. Paneerselvam
Editor – Bhoopathy Vedhagiri
Lyrics – Bharathiyar
Bharathidasan
Dayal Padmanabhan

PRO: Rekha
Social Media: Chowdrey

பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. வெற்றி & பிரிகிடா காதல் காட்சிகள் கொள்ளை அழகு.. இன்னும் அதை நீளப்படுத்தி இருக்கலாம் என்று கேட்கத் தோன்றுகிறது.. அதுபோல ஜெயில் தொடர்பான காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கேமரா கைவண்ணம் சிறைச்சாலையின் கொடுமையை சொல்லும்..

 

தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்… நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களை வரிகளாக எடுத்து அதற்கு மெட்டு போட்டு அருமையான இசை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்..

 

அரிசி வாங்க காசு இல்லாதபோது வெற்றியின் முகத்தில் கிளீன் ஷேவிங் இருக்கிறது.. அதன் பிறகு அவர் சிக்கன் வாங்கிக் கொண்டு வரும்போது கிளீன் ஷேவிங் இருக்கிறது.. இடையில் அவர் நண்பர் மாறனை சந்திக்கும்போது கொஞ்சம் தாடி முளைத்திருக்கிறது.. இதைக்கூடவா இயக்குனர் கவனிக்கவில்லை?

 

கைதி தன் நியாத்தை சொல்ல போலீஸ் தன்னுடைய நியாயத்தை சொல்கிறது.. ஒருவன் கொலை செய்தால் குற்றம்.. போலீஸ் மரண தண்டனை கொடுத்தால் அதுவும் குற்றம்..

குற்றவாளியை தூக்கில் இடுவதற்கு முன்பு அவனை பரிசோதிக்கும் டாக்டர் செய்வதும் குற்றம்… ஒரு டாக்டரின் கடமை உயிரைக் காப்பாற்றுவது தான்.. அதை விடுத்து குற்றவாளி ஆரோக்கியமானவன்.. அவனை தூக்கில் இடலாம் என்று சொல்வது எப்படி ஒரு மருத்துவரின் செயலாகும்..?

ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு போர் தொடுப்பதும் குற்றம்தான்.. எப்படி பார்த்தாலும் இந்த சம்பவங்களில் ஒரு உயிர் பலி ஆகிறது.. இது எல்லாம் குற்றமல்லவா? என பல கேள்விகளை ரசிகர்கள் முன் வைக்கிறார் இயக்குனர் தயால் பத்மநாபன்..

ஒருவன் திருடுவது குற்றம் என்றால் ஒரு வியாபாரி பாலில் தண்ணீர் கலப்பதும் குற்றம்… தங்கத்தில் செம்பு கலப்பது குற்றம்.. எல்லாம் ஒரு வகையான திருட்டு தான் என்று விவாதம் செய்கிறார் நாயகன்..

கடுமையான தண்டனைகள் இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.. ஆனால் இங்கே கடுமையான தண்டனைகள் இல்லை என்பதால் தான் குற்றங்கள் தொடர்கிறது.. அப்படியான சூழ்நிலையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்..

இப்படியான சூழ்நிலையில் அவன் செய்த குற்றத்தின் நோக்கம் சரியா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

ஒரு பெண்ணை ஒருவன் கற்பழிக்க முற்படும்போது அந்த பெண்ணை காப்பாற்ற அவனை வேறுஒருவன் கொலை செய்தால் அது எப்படி குற்றமாகும்.. இப்படி பல கேள்விகளை நாமும் முன் வைக்கலாம்..

ஆனால் இதை எல்லாம் யார் சரி செய்வது நீதித்துறையும் சட்டமும் சரி செய்து விட முடியுமா என்றால் அதற்கும் முழுமையான பதில் எங்கயும் கிடைப்பதில்லை..

காரணம் இங்கே சட்டத்தின் பக்கம் பல ஓட்டைகள் இருக்கிறது.. ஒருவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அவன் சிறையில் தள்ளப்பட்டால் அடுத்த நாளே ஜாமினில் வந்துவிடும் சூழல் இங்கே நிலவி வருகிறது..

ஒருவன் குற்றவாளி இல்லை அவன் நிரபராதி என்று வக்கீலால் வாதாட முடியும்.. அதேபோல ஒரு நிரபராதியை அவன் குற்றவாளி என்று மற்றொரு வக்கீலால் நிரூபிக்க முடியும்… இப்படியான சூழலில் மரணம் தண்டனை தேவையா என்பதை யார் முடிவு செய்வார்கள்.?

 

Lakshmi Kanthan Kolai Vazhakku movie review