டார்க் விமர்சனம்… வாடகை வீட்டில் பேயுடன் குடும்ப நடத்தும் நாயகன்?

டார்க் விமர்சனம்… வாடகை வீட்டில் பேயுடன் குடும்ப நடத்தும் நாயகன்?

 

டார்க் விமர்சனம்… வாடகை வீட்டில் பேயுடன் குடும்ப நடத்தும் நாயகன்?

 

ஸ்டோரி…

வீட்டு ஓனர் பாக்யராஜ்.. அவர் வீட்டில் மாடியில் ஒரு வீடு வாடகைக்கு உள்ளது.. அந்த வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு மூன்று இளைஞர்கள் தீக்குளித்து இறந்து விடுகின்றனர்..

அது பேய் வீடு என் நட்பு கூறப்படுவதால் எவரும் அங்கு குடியேற வர மறுக்கிறார்கள்.. இந்த சூழ்நிலையில் நாயகன் அஜய் கார்த்திக் அங்கு குடியேற வருகிறார்..

ஆனால் அதன் பிறகு பல அமானுஷ்யங்கள் அந்த வீட்டில் நடக்கவே அந்த வீட்டில் கூட தங்கவே பயப்படுகிறார்.. இரவு நேரங்களில் கூட அலுவலகத்தில் தங்க அஜய் கார்த்திக் அனுமதி கேட்கிறார்..

இப்படியான சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் பாக்யராஜ் அஜய் கார்த்திக் இருவரும் இறந்து கிடக்க அந்த விசாரணைக்கு வருகிறார் போலீஸ் கமிஷனர் நட்டி நடராஜ்..

அப்போது திடீரென இறந்து கிடக்கும் அஜய் எழுந்திருச்சு நட்டியின் பெயரைச் சொல்லி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்லிவிட்டு மீண்டும் விழுந்து விடுகிறார்..

இதனால் நட்டி குழப்பம் அடைகிறார்.. அவர் யார் ? அவர் என் பெயரை ஏன் சொல்ல வேண்டும் என்ற விசாரிக்கையில்.. நடந்தது என்ன என்பதுதான் டார்க் கதை..

கேரக்டர்ஸ்…
நாயகன் அஜய் கார்த்திக்.. இவர் பரத் நடித்த காளிதாஸ் படத்தில் நடித்தவர்..

ஸ்மார்ட்டான ஹீரோ.. பயம் பதட்டம் நடுக்கம் நட்பு பாசம் என அனைத்தையும் தாடிக்குள் ஒளிந்து கிடக்கும் முகத்தில் காட்டி இருக்கிறார்..

மறைந்த இயக்குனர் பாக்யராஜ் இறந்து ஒரு வாரத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.. படத்தின் முதல் காட்சியே பாக்யராஜ் இறந்து கிடப்பதாக காண்பிக்கப்படுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும்.. அவரின் சாந்தமான கேரக்டர் படத்திற்கு பலம்..

போலீஸ் கேரக்டரில் கம்பீரமான நடிப்பை கொடுத்திருக்கிறார் நட்டி..

அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் உண்டு..

 

டெக்னீசியன்ஸ்..

ஒளிப்பதிவாளர் ரவி சக்தி.. கேமரா ஆங்கில் கூட பயத்தை உண்டாக்குகிறது.. அடிக்கடி டிவியில் அப்படி போடு அப்படி பாட்டு ஓடுவதும் அதற்கு ஒளிப்பதிவாளர் கொடுத்த லைட்டிங் கூட பயமுறுத்தும்..

இசையமைப்பாளர் மனு ரமேஷ்.. மலையாளத்தில் ஐந்து படங்களுக்கு மேல் இசையமைத்தவர் தமிழில் மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. பின்னணி இசையில் திணற திகில் உணர்வை கொடுத்திருக்கிறார்..

ஜூலை 3 இதே நாளில் வெளியான கட்டா குஸ்தி 2 படத்திலும் அப்படி போடு அப்படி போடு என்ற விஜய் பாடல் உள்ளது.. ஆனால் அதில் காமெடியாக இருக்கும் அந்த பாடல் இதில் கொஞ்சம் த்ரில்லருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது..

டாடா படத்தை இயக்கிய ( ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு படத்தையும் இயக்கி வருகிறார்) கணேஷ் கே பாபு இந்த டார்க் படத்தை தயாரித்திருக்கிறார்

இயக்குனர் கல்யாண் கே.ஜெகன்..

வழக்கமான பேய் படங்களை காட்டிலும் மாற்றாக ஒரு திரைக்கதை அமைத்துள்ளனர்.. கிட்டத்தட்ட டிமான்டி காலனி பட சாயலில் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது..

ஆனால் ஒரு பேய் வீட்டில் கஷ்டங்களை பட்டு ஒருவர் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன.? அப்படி பாக்யராஜ்க்கு அவர் உதவ வேண்டிய அவசியம் என்ன.? வேறு ஒரு வீட்டை நண்பன் வாடகைக்கு சொல்ல அதையும் மறுக்க என்ன காரணம்.? வீட்டில் தங்க பயந்து ஆபீஸில் தங்க அனுமதி ஏன்.? இப்படியான பல கேள்விகளுக்கு பதில் இல்லை..

திரில்லர் உணர்வை தந்தாலும் லாஜிக் இல்லாத காரணத்தினால் டார்க் எடுபடவில்லை..

 

Dark movie review