பரிமளா அண்ட் கோ விமர்சனம்.. டார்க் காமெடி பேமிலி திரில்லர்

பரிமளா அண்ட் கோ விமர்சனம்.. டார்க் காமெடி பேமிலி திரில்லர்

பரிமளா அண்ட் கோ விமர்சனம்.. டார்க் காமெடி பேமிலி திரில்லர்

 

ஸ்டோரி…

பரிமளா (ஜெயராம்) & சுதந்திரம் (ஊர்வசி) இந்த தம்பதிகளின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) & மதுமிதா (அனந்திதா).. இவர்கள் யோகி பாபுவின் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்..

ஆனந்தித்தாவை காதலிக்கிறார் ஏரியா ரவுடி சாண்டி.. ஒரு கட்டத்தில் ஜெயராம் இதை எதிர்க்கிறார்.. இந்த விவரம் அந்த ஏரியாவுக்கே தெரிய வருகிறது..

ஒரு கட்டத்தில் கெத்து காட்ட உன்னோட இரண்டு பெண்களை நீ கட்டித் தர வேண்டும்.. இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார் சாண்டி..

இதனால் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து சாண்டியை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகின்றனர்.. ஆனால் அடுத்த நாள் காலை தீபாவளி அன்று சாண்டியை யாரோ கொன்று விட்டதாக தகவல் வருகிறது..

இதனால் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அடுத்தவர் மீது சந்தேகம் கொள்கின்றனர்.. இந்த சூழ்நிலையில் காதல் விவகாரத்தில் சாண்டியை ஜெயராம் எதிர்த்த விஷயம் போலீசுக்கும் தெரிய வருகிறது.

அதன் பிறகு நடந்தது என்ன.? பரிமளா குடும்பத்தை கைது செய்தார்களா.? உண்மையான கொலையாளி யார்.,?என்பதெல்லாம் சுவாரஸ்யமான டார்க் காமெடி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

பரிமளா (ஜெயராம்),
சுதந்திரம் (ஊர்வசி)

மகள்கள் பராசக்தி (சஞ்சனா)
மதுமிதா (அனந்திதா)

வில்லன் வர்கீஸ் (சாண்டி)

சமீபகாலமாக பிரபலமாக பேசப்படும் டார்க் காமெடியை கையாண்டிருக்கிறார்கள்.. ஜெயராம் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.. சில இடங்களில் ஓவர் டோஸ் ஊர்வசி.. அக்கா சஞ்சனா பக்கா. ஆனால் தங்கை ஆனந்திகா செயற்கை தனமான நடிப்பு..

அப்பாவியான தம்பதிகள் ஜெயராம் ஊர்வசிக்கு பக்கா பொருத்தம்.. இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பில் கலக்கி இருக்கின்றனர்..

காவல்துறை அதிகாரியாக மிஷ்கின் மற்றும் தமிழ் குமரன்.. மிஷ்கின் கொஞ்சம் காமெடி போலீஸ்.. தமிழ்குமரன் சீரியஸ் போலீஸ்..

இவர்களுடன் யோகிபாபு, சிங்கம்புலி, பகவதி பெருமாள், சென்ராயன், சாண்டி, பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலரும் உண்டு..

நெல்சன் படங்களில் யோகி பாபுவின் டார்க் காமெடி பெரிய அளவில் ரசிக்கப்படும்.. ஆனால் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்..

டெக்னீசியன்ஸ்…

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. தன் பணியை நேர்த்தியாக செய்து இந்த பரிமளா படத்தை பளிச்சென்று காட்டியிருக்கிறார்..

பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.. வாச்சா வுடாத பாடல் துள்ளலாக இருந்தாலும் இந்த கதை ஓட்டத்திற்கு இடைஞ்சலாக வருகிறது.. ஒருவேளை பூர்ணிமா ரவி தனக்கும் பாடல் வேண்டும் என கேட்டு இருப்பாரோ.?

குடும்பக் கதைகளுக்கு என சில இயக்குனர்கள் இருப்பார்கள்.. வீ சேகர் பாக்கியராஜ் என பலரைப் பார்த்து இருக்கிறோம். அந்த வரிசையில் தான் பாண்டிராஜ் இருக்கிறார். இதில் கொஞ்சம் மாறுபட்டு தன் டிராக்கை மாற்றி நெல்சன் போல டார்க் காமெடியை கையாண்டு இருக்கிறார்.. சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது..

இடைவேளைக்குப் பிறகுதான் படத்தின் விறுவிறுப்பு கூடி இருக்கிறது.. திருஷ்யம் படம் போல குடும்பக் கதையில் திரில்லர் கொடுத்து அதில் காமெடியை வித்தியாசமாக முயற்சித்து இருக்கிறார் பாண்டியராஜ்.. மேலும் போதை பொருள் ரவுடிசம் என எக்ஸ்ட்ரா திணித்து இருக்கிறார்..

 

Parimala And Co movie review