பிரஜின் நடித்த ‘சம்ஹாரம்’ விமர்சனம்

பிரஜின் நடித்த ‘சம்ஹாரம்’ விமர்சனம்

 

பிரஜின் நடித்த ‘சம்ஹாரம்’ விமர்சனம்

 

ஸ்டோரி…

ஆரம்பத்தில் ஒரு பகுதியில் இருவர் உடலுறவு கொள்கின்றனர்.. அப்போது அங்கு வரும் மர்ம மனிதன் அந்தப் பெண்ணை விட்டு விட்டு அவனையும் அவனது நண்பனையும் கொன்று விடுகிறான்.. அதன் பின்னர் கதை தொடங்குகிறது.. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை..

பிரஜின் இவரது தங்கை ஷருமிஷா.. தங்கைக்கு விடிஞ்சா கல்யாணம்.. தங்கைக்கு விருப்பம் இல்லை என்றாலும் வலுக்கட்டாயமாக தன் மாமன் மகனுக்கு கட்டி வைக்க முயற்சிக்கிறார்.. ஆனால் அவன் ரவுடி என்பதால் தங்கை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.. மேலும் ஷருமிஷா வேறொருவனை காதலிக்கிறார்.. எனவே காதலனை வர வைத்து ஓடிவிட திட்டம் போடுகிறார்..

அதன் பிறகு நடந்தது என்ன..? தங்கையின் திட்டம் நிறைவேறியதா.? அண்ணனின் திட்டம் நிறைவேறியதா.? தங்கைக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அண்ணன் நடத்தி வைக்க என்ன காரணம்.? மாமன் மகன் என்ன செய்தார்? விடிந்தால் கல்யாணம் நடந்ததா என்பதெல்லாம் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

பிரஜின் பத்மநாபன், ஷருமிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா.

பெரும்பாலும் பிரஜன் பல படங்களில் தாடி மீசையுடன் பார்த்து இருப்போம்.. ஆனால் இதில் முழுக்க கிளீன் சேவ் செய்த முகத்துடன் வருகிறார்.. படம் முழுக்க மாடி மேலே கீழே என்னை சுற்றி சுற்றி வருகிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது திட்டம் சபாஷ் போட வைக்கிறது..

ஷருமிஷா.. அழகிலும் ஆடையிலும் கவர்கிறார்.. அண்ணனுக்கு பயந்த சுபாவம் காதலுடன் ஓட திட்டம் என பயம் பதட்டம் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்..

கணேஷ் சாவரட்டில்.. வில்லனுக்கு ஏற்ப மிரட்டலான தோற்றம்..

தொழில்நுட்ப குழு விபரம்:-

எழுத்து & இயக்கம் : ராம் பிரபா
இசை: வி ஜி ஹரி கிருஷ்ணன்
ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம்
எடிட்டர்: ராம்நாத்
பாடலாசிரியர்: அபிநயா
மக்கள் தொடர்பு : சரண்

ஹரி கிருஷ்ணன் என்பவர் இசையமைத்திருக்கிறார்.. ஒரே இரவில் நடக்கும் திரில்லர் கதை என்பதால் ஓவர் டோஸாக இரைச்சல் இசையை கொடுத்திருக்கிறார்..

சுரேஷ்குமார் சுந்தரம் என்பவர் ஒலிப்பதிவு செய்து இருக்கிறார் பாவம் ஒரே வீட்டிற்குள் ஒரே லொகேஷன் பல மாடி ஏறி இறங்கி காட்சிகளை படம் பிடித்திருப்பார்..

ராம் பிரபா என்பவர் இயக்கி இருக்கிறார்.. ஒருவேளை இந்த படத்தை கொரோனா லாக்டவுன் காலத்தில் எடுத்திருப்பார்களோ.? குறைந்த நடிகர்களை வைத்து ஒரே இடத்தில் படமாக்கி இருக்கிறார்கள்..

இன்னும் மெனக்கெட்டு சுவாரஸ்யமான திரைக்கதை திரில்லர் அனுபவம் சிறந்த நடிகர்களின் பங்களிப்பு என கொடுத்து இருந்தால் இந்த சம்ஹாரம் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

தயாரிப்பு: வித்யா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்: வேல் முருகன்

 

Samhaaram movie review