‘வாலாட்டி’ இயக்குநரை மணந்த ‘லவ் டுடே’ நடிகை ரவீனா..; மகிழ்ச்சியில் ஸ்ரீஜா ரவி

‘வாலாட்டி’ இயக்குநரை மணந்த ‘லவ் டுடே’ நடிகை ரவீனா..; மகிழ்ச்சியில் ஸ்ரீஜா ரவி

‘வாலாட்டி’ இயக்குநரை மணந்த ‘லவ் டுடே’ நடிகை ரவீனா..; மகிழ்ச்சியில் ஸ்ரீஜா ரவி

 

மலையாளம் – தமிழ் – தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் பின்னணி குரல் கொடுத்து வருபவர் ஸ்ரீஜா ரவி.. இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்..

சமீபத்தில் வெளியான ‘கர’ படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்திருந்தார்.. மேலும் சூப்பர் ஹிட் அடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ரீஜா ரவி..

இவரின் பூர்வீகம் கேரளா என்றாலும் சென்னையில் தங்கி பல படங்களில் பணியாற்றி வருகிறார்..

இவரைப் போலவே இவரது ஒரே மகள் ரவீனா ரவியும் முன்னணி டப்பிங் கலைஞராக பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்..

‘ஐ’ படத்தில் எமி ஜாக்சனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்தான்.. இவரும் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ‘வட்டார வழக்கு’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரவீனா.. மேலும் அனைத்து மக்களையும் கவர்ந்த லவ் டுடே படத்தில் பிரதீப் பின் அக்காவாக யோகி பாபுவின் ஜோடியாக நடித்திருந்தார்.. ‘மாமன்னன்’ படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்..

இந்த நிலையில் இன்று மே 10ஆம் தேதி ரவீணா ரவி திருமணம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.. ‘வாலாட்டி’ என்ற மலையாளப் படத்தில் பணி புரிந்த போது அந்த படத்தின் இயக்குனர் தேவனுக்கும் பிரவீனாவுக்கும் காதல் மலரவே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்..

இவர்களின் திருமணம் பெற்றோர் முன்னிலையில் கேரளாவில் நடைபெற்றது.. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து மணமக்களை வாழ்த்துங்கள் என்று ஸ்ரீஜா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..

 

Actress Raveena Ravi and Director Devan got married