Skip to content
Right News Raja
  • News
  • Politics
  • Movie Review
  • Do you Know
  • General

‘விலங்கு’ சீரிஸை ரசிக்காதவர் யாருமில்லை… அதே போல இந்த இந்த ‘வாரண்ட்’… – ராம்குமார் 

  • admin
  • May 10, 2026
  • News
‘விலங்கு’ சீரிஸை ரசிக்காதவர் யாருமில்லை… அதே போல இந்த இந்த ‘வாரண்ட்’… – ராம்குமார் 
0
SHARES
FacebookTwitter

‘விலங்கு’ சீரிஸை ரசிக்காதவர் யாருமில்லை… அதே போல இந்த இந்த ‘வாரண்ட்’… – ராம்குமார்

விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்..

வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

*( 2/2 )*

நடிகை சாயாதேவி பேசியதாவது,
“முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.

நடிகர் வையாபுரி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5-ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,
“‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது.
“ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.

தயாரிப்பாளர் குமார் பேசியதாவது…
நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்..

நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது..,
ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்..

இயக்குநர் ராம்குமார் பேசியதாவது…

பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது..,
பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.

கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது..

All will like Warrant like Vilangu Web series says Ramkumar

Post Views: 167
'விலங்கு' சீரிஸை ரசிக்காதவர் யாருமில்லை... அதே போல இந்த இந்த 'வாரண்ட்'... - ராம்குமார்All will like Warrant like Vilangu Web series says Ramkumar

Post navigation

Prev
Next

Related articles

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்
  • News

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்

  • admin
  • May 17, 2026
ஆழமான உணர்வுகளுடன்  உடல் ரீதியாக மாறிய கோமலி..; ‘மண்டவெட்டி’ குறித்து சரண்ராஜ்
  • News

ஆழமான உணர்வுகளுடன்  உடல் ரீதியாக மாறிய கோமலி..; ‘மண்டவெட்டி’ குறித்து சரண்ராஜ்

  • admin
  • May 17, 2026
96 – மெய்யழகன் இயக்குனருடன் கூட்டணி..; தமிழில் ஹீரோவாக பகத் பாசில்..!
  • News

96 – மெய்யழகன் இயக்குனருடன் கூட்டணி..; தமிழில் ஹீரோவாக பகத் பாசில்..!

  • admin
  • May 16, 2026
இனி நடிக்க மாட்டேன்.. பிரச்சனைக்கு இட்லி நடிகையே காரணம்.. எனக்கு பிளாக் மெயில் திருமணம் – ரவி மோகன்
  • News

இனி நடிக்க மாட்டேன்.. பிரச்சனைக்கு இட்லி நடிகையே காரணம்.. எனக்கு பிளாக் மெயில் திருமணம் – ரவி மோகன்

  • admin
  • May 16, 2026
விஜய்க்கு சவால் காத்திருக்கு..;  நல்லது செய்ய எங்க குடும்பம் காத்திருக்கு.. – சௌந்தர்யா ரஜினி
  • News

விஜய்க்கு சவால் காத்திருக்கு..;  நல்லது செய்ய எங்க குடும்பம் காத்திருக்கு.. – சௌந்தர்யா ரஜினி

  • admin
  • May 16, 2026
பிரம்மாண்ட சினிமா வேண்டாம்.; எதிர்காலத்தை பாதுகாக்க கமல் அட்வைஸ் 
  • News

பிரம்மாண்ட சினிமா வேண்டாம்.; எதிர்காலத்தை பாதுகாக்க கமல் அட்வைஸ் 

  • admin
  • May 16, 2026

Search

Follow Me

  • facebook
  • instagram
  • twitter

Latest Posts

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்

  • admin
  • May 17, 2026
ஆழமான உணர்வுகளுடன்  உடல் ரீதியாக மாறிய கோமலி..; ‘மண்டவெட்டி’ குறித்து சரண்ராஜ்

ஆழமான உணர்வுகளுடன்  உடல் ரீதியாக மாறிய கோமலி..; ‘மண்டவெட்டி’ குறித்து சரண்ராஜ்

  • admin
  • May 17, 2026
96 – மெய்யழகன் இயக்குனருடன் கூட்டணி..; தமிழில் ஹீரோவாக பகத் பாசில்..!

96 – மெய்யழகன் இயக்குனருடன் கூட்டணி..; தமிழில் ஹீரோவாக பகத் பாசில்..!

  • admin
  • May 16, 2026
இனி நடிக்க மாட்டேன்.. பிரச்சனைக்கு இட்லி நடிகையே காரணம்.. எனக்கு பிளாக் மெயில் திருமணம் – ரவி மோகன்

இனி நடிக்க மாட்டேன்.. பிரச்சனைக்கு இட்லி நடிகையே காரணம்.. எனக்கு பிளாக் மெயில் திருமணம் – ரவி மோகன்

  • admin
  • May 16, 2026
விஜய்க்கு சவால் காத்திருக்கு..;  நல்லது செய்ய எங்க குடும்பம் காத்திருக்கு.. – சௌந்தர்யா ரஜினி

விஜய்க்கு சவால் காத்திருக்கு..;  நல்லது செய்ய எங்க குடும்பம் காத்திருக்கு.. – சௌந்தர்யா ரஜினி

  • admin
  • May 16, 2026

Recent post

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்

  • May 17, 2026
ஆழமான உணர்வுகளுடன்  உடல் ரீதியாக மாறிய கோமலி..; ‘மண்டவெட்டி’ குறித்து சரண்ராஜ்

ஆழமான உணர்வுகளுடன்  உடல் ரீதியாக மாறிய கோமலி..; ‘மண்டவெட்டி’ குறித்து சரண்ராஜ்

  • May 17, 2026
96 – மெய்யழகன் இயக்குனருடன் கூட்டணி..; தமிழில் ஹீரோவாக பகத் பாசில்..!

96 – மெய்யழகன் இயக்குனருடன் கூட்டணி..; தமிழில் ஹீரோவாக பகத் பாசில்..!

  • May 16, 2026

Social

  • Like
  • Follow
  • Follow
  • Connect
  • Follow
  • Follow

Popular Post

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்

நண்பன் பசில் ஜோசப் அழைத்தும் ‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? – சஞ்சு சாம்சன்

  • May 17, 2026
தங்கலானை கொண்டாடும் வட இந்தியா..; மகிழ்ச்சியில் விக்ரம் & ரஞ்சித் குழுவினர்

தங்கலானை கொண்டாடும் வட இந்தியா..; மகிழ்ச்சியில் விக்ரம் & ரஞ்சித் குழுவினர்

  • September 10, 2024
ப்ரோ கபடி லீக் சீசன் XI – தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாக சாகர் ரதி

ப்ரோ கபடி லீக் சீசன் XI – தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாக சாகர் ரதி

  • September 10, 2024

Copyrights © 2024. All rights reserved.

  • Privacy
  • Policy
  • Terms & Conditions