TVK Leader VIJAY சரித்திர நாயகனாக ‘ஜனநாயகன்’..; அரசியலில் எம்ஜிஆர் சாதனையை முறியடித்த விஜய்

TVK Leader VIJAY சரித்திர நாயகனாக ‘ஜனநாயகன்’..; அரசியலில் எம்ஜிஆர் சாதனையை முறியடித்த விஜய்

 

TVK Leader VIJAY சரித்திர நாயகனாக ‘ஜனநாயகன்’..; அரசியலில் எம்ஜிஆர் சாதனையை முறியடித்த விஜய்

 

2026 மே 4 – தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்.. அரசியல் களம் மட்டுமின்றி தமிழ் சினிமா உலகமும் இந்த நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது..

அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் அரசியலில் இறங்கி முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்..

தமிழக வெற்றி கழகம் என்ற தன் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அவர் நிறுத்தியுள்ளார்..

ஒவ்வொரு தொகுதிகளும் உங்கள் விஜய் நிற்பதாக எண்ணி எனக்கு விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கடந்த சில மதங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்..

இந்த நிலையில் இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதில் நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் பெரம்பூர் மற்றும் திருச்சி தொகுதியில் இரண்டு தொகுதிகளில் அவர் வெற்றி பெற்று தனது முதல் சட்டமன்ற தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக திமுக என்ற இரு மாபெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளார் விஜய்.

இது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.. 1970 ஆண்டில் முதல்முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் கட்சி தொடங்கி போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.. அப்போது அவர் 32 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.. அதைவிட கூடுதலாக விஜய் 34% வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.. இதுவும் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது..

மேலும் எம்ஜிஆர் சில ஆண்டுகள் திமுகவில் பயணித்து எம்எல்ஏவாகி அதன் பிறகு கருணாநிதி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் கட்சியை துவங்கினார்.. ஆனால் விஜய் எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாமல் முதல் முறை களம் கண்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது கவனிக்கத்தக்கது..

அது மட்டும் இல்லாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பிஜேபி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.. ஆனால் விஜய் தனியாக களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்று இருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.. மேலும் இந்திய அரசியல் உலகிலும் இது மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றி கடகம் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சி அமைக்க 118 இடங்களை தமிழக வெற்றிக்கழகம் பெற வேண்டி உள்ள நிலையில் இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய் நாட வேண்டியுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பார்.. அதன் பிறகு அவர் தனக்குள்ள மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னரிடம் கால அவகாசம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கிட்டத்தட்ட 70 படங்களில் நடிகர் விஜய் நடித்திருந்தாலும் ஜனநாயகன் -: அவரது கடைசி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை வெளியாகவில்லை..

எனவே தமிழக முதலமைச்சர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் என பெயர் டைட்டில் கார்டு வரும் நாள் அதிக அளவில் இல்லை..

 

நடிகராக பயணித்த போது பல சமூக சார்ந்த போராட்டங்களிலும் விஜய் ஈடுபட்டு வந்தார் அதன் விவரங்கள் இதோ

2009-ஆம் ஆண்டு ஜூலையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு விஜய் விருதுகளை வழங்கினார்.

மக்களுக்கு நடுவில் பணியாற்றும் எண்ணம் இருப்பதை உணர்த்துவதைப் போல இந்தச் செயல்கள் இருந்தன. தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்புக்கு வலுசேர்த்த நிகழ்வான, 2017-ஆம் ஆண்டு அனிதா என்ற மாணவி மரணம் நிகழ்ந்த போது அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய்.

2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்த விஜய், அதே ஆண்டில் கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்..

Tamilaga Vettri Kalaga Leader Vijay won TN election 2026

 

 

 

 

 

Related articles