TN 2026 விமர்சனம்… தமிழகத்தின் இரு கண்களாய் அரசியல் – சினிமா

TN 2026 விமர்சனம்… தமிழகத்தின் இரு கண்களாய் அரசியல் – சினிமா

TN 2026 விமர்சனம்… தமிழகத்தின் இரு கண்களாய் அரசியல் – சினிமா

 

ஸ்டோரி…

சினிமாவின் உச்ச நட்சத்திரம் அரசியலில் நுழைந்து எப்படி ஜொலிக்கிறார் என்பதுதான் ஒன்லைன் கதை..

தங்க நட்சத்திரமாக நட்டி நடராஜ்.. இவருக்கு பக்கபலமாக அரசியல் ஆலோசகராக தம்பி ராமையா..

நாம் தமிழ் சினிமாவில் பார்த்து வியந்த ஆளுமைகள்… எம்ஜிஆர் ரஜினிகாந்த் விஜயகாந்த் விஜய் வரிசையில் நட்டியை இணைத்து இருக்கிறார் உமாபதி ராமையா..

கேரக்டர்ஸ்…

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியல் நையாண்டி கலந்து அரசியல்வாதிகளுக்கும் தொண்டர்களுக்கும் விருந்து வைத்து இருக்கின்றனர் இந்தப் படக்குழுவினர்..

குல்கந்து குமார் என்ற தங்க நட்சத்திரமாக ராஜாங்கம் நடத்தி இருக்கிறார் நடராஜ்.. தன் உடல் மொழியில் எம்ஜிஆர் ரஜினி விஜய் கலந்திருக்கிறார் நட்ராஜ்.. நிச்சயம் அந்தந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமும் கொஞ்சம் உற்சாகமும் தரலாம்..

தம்பி ராமையா.. அவருக்கு ஏற்ற கதை… அவரே எழுதிய கதை என்பதால் தாராளமாய் விளையாடியிருக்கிறார் தம்பி ராமையா..

இவருடன் எம் எஸ் பாஸ்கர் & இளவரசு.. பக்கா அரசியல்வாதிகளாக பட்டையை கிளப்பி உள்ளனர்.. மெகா கூட்டணி..

ஆதித்யா கதிர் டைமிங் காமெடி மூலம் ரசிக்க வைக்கிறார்.. நாயகியாக ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் உண்டு.. அரசியல் ஆட்டத்திற்கு இவர்களும் கை கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசையில் தேர்தல் களை கட்டி இருக்கிறது..

பி ஜி முத்தையா ஒளிப்பதிவு.. தமிழக மக்களின் வாழ்வியலில் கலந்துவிட்ட சினிமாவையும் அரசியலையும் காட்சிகளாக இணைத்து இருக்கிறார்..

அப்பாவின் கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கியிருக்கிறார் அவரது மகன் உமாபதி ராமையா.. புரட்சிகரமான வசனங்கள் இல்லாமல் எதார்த்த அரசியலை சினிமாத்தனம் கலந்து தொண்டர்களையும் ரசிகர்களையும் பரவசப்படுத்தி இருக்கிறார்..

பெரும்பாலான காட்சிகள் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களுக்கும் ரசிகர்களுக்கும் வருத்தத்தை கொடுக்கலாம்.. ஆனால் நடுநிலையான ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இந்த படம் நிச்சயம் தேர்தல் கால விருந்துதான்..

 

TN 2026 movie review