LEADER லீடர் விமர்சனம் 4.25/5.. Leading Hero
LEADER லீடர் விமர்சனம் 4.25/5..
ஸ்டோரி…
லெஜன்ட் சரவணன் இவர் ஒரு கார் மெக்கானிக்.. ஹார்பருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு கார்களுக்கும் இவர்தான் பேவரைட் மெக்கானிக்.. இவரது ஓனர் விடிவி கணேஷ்..
தாய் இல்லாத தன் குழந்தையை பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.. குழந்தைக்காக எதையும் செய்யும் ஹீரோ இவர்..
இந்த சூழ்நிலையில் ஹார்பரில் நிறைய போதை மருந்து கடத்தல் நடப்பதை அறிகிறார் போலீஸ் ஆண்ட்ரியா..
ஆனால் அங்கு காவல்துறை எளிதாக நுழைய முடியாத சூழ்நிலையில் லெஜெண்ட் சரவணனின் உதவியை நாடுகிறார்.. அது என்னுடைய வேலை என்ற மறுத்துவிடுகிறார் சரவணன்.
இந்த சூழ்நிலையில் சரவணனின் குழந்தை கடத்தப்படுகிறது.. ஹார்பரில் உள்ள கண்டெய்னரில் உன் குழந்தை இருக்கிறாள் என்ற தகவலும் வருகிறது.
குழந்தையை கடத்தியவர்கள் யார்.? அதன் பின் நடந்தது என்ன.? கடத்தியவரின் நோக்கம் என்ன? என்பதை விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக சொல்கிறார் லீடர்..

கேரக்டர்ஸ்…
Legend Saravanan – Sakthivel (A.K.A) Ponmaran
Sham – Bakthavachalam
Andrea Jeremiah – Indra Sathyamoorthy
Santhosh Prathap – Devil
Payal Rajput – Meera
Lal – Sathyamoorthy
“Bahubali” Prabaharan – Salt
Amirtha Aiyer – Renuka
VTV Ganesh – Thangapazham
Iyal – Irene
Aishwarya – Durga
Mariam George – Father
Pathmen – Vinoth
Yogiram – Yogi
Velarunchalam – Velu
Niranjan Thomas – Niranjan
Aranthanki Nisha – Devi
“Adithya” Kathir – Ferrari
Badava Gopi – Government staff
Ashok Pandiyan – IG (Arunagiri)
Shoban Babu – DSP (James Kannan)
Vijayalakshmi – Fathima
Murugan – Constable (Indra Sidekick)
Jayasmirtha – Anusha
Kumar Natarajan – Team Lead
லெஜண்ட் சரவணன்.. லெஜண்ட் படத்தில் பல விமர்சனங்களை சந்தித்தவர் லீடர் படத்தில் அனைத்தையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்.. நானும் இனி ஒரு மாஸ் ஹீரோ தான் என்பதை தன் கடின உழைப்பில் காட்டியிருக்கிறார்.. சென்டிமென்ட் மற்றும் ரொமான்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் தேவை..
வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இனி லீடர் படத்தின் ஆக்ஷன் காட்சி நினைவுடன் பயணிப்பர்.. மறக்க முடியாத ஆக்சன் அதகளம் செய்து இருக்கிறார் லெஜெண்ட் சரவணன்..
பாயல் ராஜ்புத்.. நாயகியாக கொஞ்ச நேரம் வந்தாலும் ஆக்ஷனில் அதிரடி.. லீடர் அடுத்த பாகத்தில் இவருக்கான கூடுதல் காட்சிகள் இருக்கும் என நம்பலாம்..
சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்ரியா, லால்,.. அனைவரும் அருமை.. தனி ஒருவன் அரவிந்தசாமி வரிசையில் ஸ்டைலிஷ் வில்லனாக இணைந்திருக்கிறார் சந்தோஷ்.. அவருடைய உடல் மொழியும் உடை மொழியும் அழகு..
காவல்துறை அதிகாரிகளாக கம்பீர நடிப்பில் சாம் மற்றும் ஆண்ட்ரியா அசத்தல்..
குழந்தை நட்சத்திரம் இயல்.. காது கேளாத சிறுமியாக நடிப்பிலும் அழகிலும் கவர்ந்து விடுகிறார்.. பார்த்தவுடன் பரிதாபத்தையும் அள்ளிக் கொள்கிறார்..
விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் உண்டு.. சிங்கிள் பாதர் சரவணனுக்கு பயந்து அறந்தாங்கி நிஷா வீட்டை காலி செய்யும் காட்சிகள் சிரிப்புக்கு கேரண்டி..

டெக்னீசியன்ஸ்…
Writer & Director : R. S. Durai Senthilkumar
Producer : Legend Saravana Stores Productions
Music: Ghibran Vaibodha
Director Of Photography: Venkatesh S
Editor : Pradeep E Ragav
Art Director: G. Durairaj
Stunts: Mahesh Mathew
Costume Designer : Deepthi RJ (Legend Saravanan) , Poorthi Pravin (Andrea)
VFX: PhantomFX
DI: LV Prasad Studios
Sound Design : A. Sathish Kumar
Sound Studio : Bang Studios
Publicity Designer : Prathool NT
Titles and Animation : Aaradhana Studios, Chennai
Songs : Kabilan, Viveka, Mohan Rajan
Dance : Sankkaraiyya D
PRO : Nikil Murukan
Make Up: N.Sakthivel
பின்னணி இசையில் ஒரு சில இசையமைப்பாளர்களே அதிர வைப்பார்கள்.. அதில் ஜிப்ரானும் ஒருவர்.. இந்த படத்திற்கு இசையை தவிர்த்து காட்சிகளை ரசிக்க முடியாது.. அப்படி ஒரு அதகளம் செய்திருக்கிறார்.. நிறைய பாடல்களைப் போட்டு கதையை திசை திருப்பாமல் ஓரிரு பாடல்கள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.. முருகர் பாடல் இந்து மதத்தினருக்கும் பக்தி பரவசத்தை ஊட்டும்..
மகேஷ் மேத்யூ என்பவர் சண்டை பயிற்சிகள் அமைத்திருக்கிறார்.. ஒவ்வொரு சண்டையும் சரவெடி.. ஜீப் கார் சேஸிங்… பஸ் சேஸிங்.. கண்டைனர் லாரி சேஸிங்.. வந்தே பாரத் டிரெயின் ஃபைட் என ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கும்..
பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்து இருக்கிறார்.. ஒரு மாஸ் படத்திற்கு விறுவிறுப்பான காட்சிகள் தான் தேவை என்பதை அறிந்து எடிட்டிங் செய்து நம்மை நிறைய காட்சிகளில் சீட்டு நுனியில் உட்கார வைத்திருக்கிறார்.
வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ஹார்பர் கூட இவ்வளவு அழகா என்பதை தன்னுடைய கேமரா கண்கள் மூலம் வியக்க வைக்கிறார்..
காக்கிச்சட்டை, கொடி, கருடன் என ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாக கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் துரை செந்தில்குமார்.. இதில் மாஸ் படங்களை தொகுத்தது போல வேற லெவல் மாஸ் காட்டியிருக்கிறார்..
சிம்பிளான கதை தானே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளை கொடுத்து இவர் வேற லெவல் பா என சொல்ல வைக்கிறார்..
பெரும்பாலும் ஷங்கர் அட்லி லோகேஷ் படங்கள் இந்த பிரம்மாண்டத்தை கண்டிருப்போம்.. இப்போது அந்த வரிசையில் துரை செந்தில்குமார் இணைந்து விட்டார் என்றே சொல்லலாம்..
லெஜன்ட் சரவணன் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் அதில் பயன்படுத்தப்பட்ட VFX காட்சிகள் கூட படத்திற்கு பெரும் பலம்.. ஒரு சில படங்களை ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்வோம்.. ஆனால் இதில் இரண்டு மூன்று முறை கூட பார்க்கலாம்..
Legend Saravanan Leader review
—-

