விஜய் ஒரு சிங்கம்.. TN2026 படத்தை பார்த்து விட்டு பேசுங்க…. – நட்டி நட்ராஜ்

விஜய் ஒரு சிங்கம்.. TN2026 படத்தை பார்த்து விட்டு பேசுங்க…. – நட்டி நட்ராஜ்

 

விஜய் ஒரு சிங்கம்.. TN2026 படத்தை பார்த்து விட்டு பேசுங்க…. – நட்டி நட்ராஜ்

 

 

தம்பி ராமையாவின் கதையில், அவரது மகன் உமாபதி இயக்கத்தில், நட்டி என்ற நடராஜ் நடிப்பில் உருவாகியுள்ள TN 2026 படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது..

கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் டீசரில் “சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?..

நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் !” போன்ற வசனங்கள் உள்ளன.

சினிமா உச்ச நட்சத்திரம் ஒருவர் அரசியலில் குதிக்கிறார். படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் சில நிஜ அரசியல் தலைவர்களை நினைவுபடுத்துவதாக கமென்ட்ஸ் எழுந்து வருகின்றன..

ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 

நட்டி நட்ராஜின் தோற்றம், நடை, உடை, பாவனை விஜய்யை போலவே இருப்பதாகவும் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

டிஎன் 2026’ படத்தின் இயக்குனர் உமாபதி ராமையா விஜய்யை விமர்சிக்கும் வகையில் படத்தை எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்..


‘டிஎன் 2026’ திரைப்படத்தை தமிழக தேர்தல் முடியும் வரை தடை செய்ய வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட போது ஒட்டுமொத்த படக்குழுவினரும்..

இந்த படத்தை படம் போலவே பாருங்கள், இதில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இணைத்து எடுக்கவில்லை. டீசரில் உள்ள காட்சிகளை வைத்து நீங்களாக கற்பனை செய்ய வேண்டாம். படம் வெளியான பிறகு முழு கதையும் புரியும் என்றனர்..

மேலும் விஜய் கிண்டல் அடித்து இந்த படத்தில் காட்சிகள் இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு..

யாரையும் அசிங்கப்படுத்தும் நோக்கம் இல்லை. அவர் ஒரு சிங்கம் மாதிரி… யாராலும் அவரை ட்ரோல் செய்ய முடியாது.. நானும் அவரும் சில படங்களில் இணைந்து பணி புரிந்திருக்கிறோம்.. எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது.. என்று நடராஜ் தெரிவித்தார்..

We never troll Vijay and TVK Party says Tn 2026 movie team