HAPPY RAJ விமர்சனம்.. 2/5.. UNHAPPY AUDIENCE
HAPPY RAJ விமர்சனம்.. 2/5.. UNHAPPY AUDIENCE
மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஹாப்பி ராஜ்..
ஸ்டோரி…
உருவகேலி-யை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது..
ஜார்ஜ் மரியான் & கீதா கைலாசம் இவர்களின் மகன் ஜிவி பிரகாஷ்.. ஜார்ஜ் ஒரு ஆசிரியர் என்றாலும் இவரது உருவத்தை வைத்து பலரும் இவரை குதிரை முட்டை என்று கேலி செய்கின்றனர்.. (குதிரை முட்டை போடுமா.?என்ற லாஜிக் எல்லாம் கேட்கக்கூடாது.)
இந்த நிலையில் ஜிவி பிரகாஷை (காதலிக்கும்) ஒரு பெண் ஒரு கட்டத்தில் உன்னை கட்டிக் கொண்டால் குட்டி குதிரை முட்டை மனைவி என்று என்னை கிண்டல் அடிப்பார்கள்.. எனவே நீ வேண்டாம் என்கிறார். (இந்த லாஜிக்கும் என்ன கேள்வி என்றெல்லாம் கேட்கக்கூடாது.)
உள்ளூரில் இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும் என்பதால் பெங்களூருக்கு வேலைக்கு செல்கிறார் ஜிவி பிரகாஷ் அங்கு ஒரு பணக்கார பெண்ணை (ஸ்ரீ கௌரி பிரியா) இவரின் திறமையை அறிந்து காதலிக்கிறார்..
ஆனாலும் தன் தந்தை உருவத்தை காட்டக்கூடாது என்பதனால் போட்டோவை கூட தன் காதலியிடம் காட்ட மறுத்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் ஜிவி பிரகாஷின் குடும்பம் பற்றி ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
ஹேப்பி ராஜ். ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருக்கிறார்.
ஆனந்தராஜ் அதுதான் ஹேப்பி ராஜ்.. ஹாப்பி என்ற தலைப்புக்கு ஏற்ப ஆட்டம் பாட்டம் காதல் நட்பு சென்டிமென்ட் என ஹாப்பியாகவே இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.. ஆனால் ஆடியன்ஸ் நிலை அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
உங்கள் நடிப்பை MUTE செய்துவிட்டு மியூசிக்கில் ஹாப்பி ஆக்குங்கள் ஜீவி என்று சொல்லத் தோன்றுகிறது… முக்கியமாக இதில் ஜிவி பிரகாஷின் கெட்டப் சரியில்லை..

நாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா.. அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்..
பல ஆண்டுகளுக்கு பிறகு, அது ஸ்டைலிஷ் ஆன லுக்கில் அப்பாஸ் ஆனால் அவருக்கு நடிப்பிற்கு தீனி போதவில்லை.. அவரது பிளாஷ்பேக் காட்சிகளில் எமோஷனலாக கவர்கிறார்.. ஆனால் ஒரு ட்ரெயின் டிக்கெட் வைத்து தான் இவர்கள் இரு குடும்பம் இணையும் என்பதெல்லாம் நம்ப முடியாத கற்பனை..
கதை நாயகனாக ஜார்ஜ் மரியம் வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. இவரே கதாநாயகன் என்று அடையாளப்படுத்தி போஸ்டர் அடித்திருக்கலாம்.. தாழ்வு மனப்பான்மையில் வளரும் ஒரு நபர் அதை தவிர்க்க சமூகத்தில் பெரிய நிலையை உயர்ந்து மாமனிதராக அசத்தியிருக்கிறார்.. இவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் தந்தையை மதிக்காத பிள்ளைகளுக்கு சாட்டையடி..
எந்தப் பிள்ளையும் தன் தந்தையை மன்னிப்பு கேட்க சொல்ல மாட்டார்கள்.. ஆனால் தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என மகன் சொல்வது லாஜிக் மீறிய கற்பனை..

டெக்னீசியன்ஸ்…
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசை கை கொடுத்த அளவிற்கு பாடல்கள் கை கொடுக்கவில்லை.. ஆடின இருப்பேன் என்ற பாடல் தாளம் போட வைக்கும்..
பெங்களூர் காட்சிகள் கலர்ஃபுல்.. அதில் அம்மா கீதா கைலாசம் போடும் ஆட்டம் மாடர்ன் லுக் கலகலப்புக்கு கேரண்டி..

மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் இயக்கியிருக்கிறார்.. இடைவேளை வரை சீட்டில் அமர்ந்திருப்பது பெரிய சாதனை இடைவேளைக்குப் பிறகுதான் படம் கொஞ்சம் ஓகே.. ஜார்ஜ் மரியம் நடிப்பின் மூலம் கை கொடுத்திருக்கிறார்..
ஆக ஹாப்பி ராஜ்.. ரசிகர்களை சோதித்து நீங்கள் ஹாப்பியாக இருந்தால் போதுமா.?
Happy Raj movie review

