FOURTH FLOOR விமர்சனம்… நாலாவது மாடியில் நச்சுன்னு ஒரு த்ரில்லர்

FOURTH FLOOR விமர்சனம்… நாலாவது மாடியில் நச்சுன்னு ஒரு த்ரில்லர்

 

FOURTH FLOOR விமர்சனம்… நாலாவது மாடியில் நச்சுன்னு ஒரு த்ரில்லர் ஃபிலிம்

 

கதை…

ஒரு அப்பார்ட்மெண்டில் நான்காவது மாடியில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் இந்த படத்தில் மையக்கரு..

போர்த் ஃப்ளோர் ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடியேறுகிறார் ஆரி.. இவரது முன்னாள் காதலியை தேடிக் கொண்டிருக்கிறார்.. இவர் தங்கியிருக்கும் வீட்டில் சில மர்மங்கள் அமானுஷ்யங்கள் நடக்கிறது..

இந்த சூழ்நிலையில் இவரின் கண்களுக்கு மட்டும் மரணமடைந்த சிலர் தெரிகின்றனர்.. ஆனால் மற்றவர்களுக்கு தெரியாத காரணத்தினால் இவருக்கு குழப்பம் ஏற்படுகிறது.. அதன் பின்னணி என்ன.? இவருக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

பேய் படம் என்பதால் என்னவோ படம் முழுக்க சீரியஸ் ஆகவே வருகிறார் நாயகன் ஆரி.. காதல் காட்சியில் கூட பெரிதாக ரொமான்ஸ் இல்லை..

பவித்ரா மற்றும் தீப்ஷிகா இரண்டு ஹீரோயின்ஸ்.. ஹீரோயின் இருந்தால் பேய்களுக்கு நிறைய வேலை இருக்கும்.. ஆனால் இதில் ஹீரோயின்களுக்கு பெரிய வேலையில்லை..

தலைவாசல் விஜய் மற்றும் சுப்பிரமணிய சிவா.. இவர்களின் நடிப்பு அனுபவத்திற்கு இவர்களின் கேரக்டரில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர்..

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தரண் குமாரின் பின்னணி இசை மிரட்டல் ரகம்.. ஒரு திரில்லருக்கான உயிரோட்டத்தை இசையில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்..

லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ஒரு அப்பார்ட்மெண்டில் பல கோணங்களை காட்டி இருப்பது சிறப்பு.

ராம் சுதர்சன் எடிட்டிங்.. திரில்லர் படத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக படத்தொகுப்பை செய்திருக்கிறார்..

எல் ஆர் சுந்தரபாண்டியன் இயக்கியிருக்கிறார்.. இடைவேளை வரை வழக்கமான பயமுறுத்தல் திரைக்கதை காரணங்களை சொல்லி இடைவேளைக்குப் பிறகு த்ரில்லர் சுவாரசியம் கொடுத்து நான்காவது மாடியில் இன்னும் பல மாடி உயர வைத்திருக்கிறார்..

 

Fourth Floor movie review