மாயபிம்பம் விமர்சனம் 4.25/5… ஆண்களுக்கு சேது.. பெண்களுக்கு சுமதி.. காதலை போற்றிய சுரேந்தர்.!
மாயபிம்பம் விமர்சனம் 4.25/5… ஆண்களுக்கு சேது.. பெண்களுக்கு சுமதி.. காதலை போற்றிய சுரேந்தர்.!
ஸ்டோரி…
காதல்.. அந்த காதலை ஒரு ஆண் என்பவன் எப்படி அணுகுகிறான்… அந்த காதலை ஒரு பெண் என்பவள் எப்படி அணுகுகிறாள் என்பதை அவரவர் பார்வையில் இருந்து உணர்வு பூர்வமாக உணர்ச்சிகரமாக சொல்லி இருக்கிறார் சுரேந்தர்..
அந்தக் காதலை பெண் என்பவள் உயிராக நினைக்க… அவனோ அது காமமாக மட்டும் எண்ணி நெருங்கி வரும் வேளையில் இருவருக்கும் உண்டாகும் பிரச்சனை என்ன என்பதுதான் இந்த ‘மாய பிம்பம்.’

கேரக்டர்ஸ்…
ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார்…
கவர்ச்சியாக இல்லாமல் கண்களால் நம்மை கவர்ந்த காந்த நாயகியாக ஜானகி.. நாம் பெரும்பாலும் பார்க்கும் ஓர் அழகிய முகம்.. அழகான பற்கள்.. அழகான கண்கள் அழகான உதடுகள் என அம்சமாக ஜொலிக்கிறார்..
உன்னை காதலனாக நம்பினேன் என்னை இப்படி செய்து விட்டாயே என அவர் ஏங்கும் அந்த ஒரு காட்சியில் அவரின் உணர்வை அப்படியே நமக்குள் கடத்தி விடுகிறார்.

காதல் என்பது என்ன.. காமம் என்பது என்ன என புரியாத விடலை பசங்களாக நால்வர்.. அதில் ஒருவருக்கு மட்டும் காதல் அடுத்தவனுக்கு அது காமம் என்ற பாணியில் நண்பர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் சுவாரசியம்..
குடும்பத்தில் நடக்கும் பாச போராட்டம் ஆஸ்பத்திரியில் நண்பர்களின் அரவணைப்பு என ஒவ்வொன்றையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்…
ஒரு குடும்பத்தின் நம்பிக்கை நாயகன்… அதில் அம்மா அப்பா அண்ணன் அண்ணி அண்ணன் மகள் என அனைவரையும் அழகியலாக சொல்லி இருக்கிறார்..
ஜானகியின் தோழியாக வருபவரும் அவரின் உதவியும் நட்புக்கு உதாரணம்..

டெக்னீசியன்ஸ்…
Banner Selfstart Productions
Cameraman : Edwin Sakay
Music Director : Nandha
Editor : Vinoth Sivakumar
Art: Martin
Lyrics: Viveka, Padmavati
நந்தா இசையில் பாடல்கள் நவரசம்.. பின்னணி இசை ஓகே ரகம் என்றாலும் பாடல் வரிகள் அசத்தல்..
பாடல்.. மண்ணில் ஒரு நாள் மட்டும் வாழ்ந்திடும் ஈசல் போல.. என் கதை ஆயுள் இன்று முடிந்ததே… என்ற பாடல் வரிகளும் அந்த உணர்வான காட்சிகளும் என்றும் நம் மனதை கலங்கடிக்கும்…
கடலூர் & சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளை பெரும்பாலும் எந்த சினிமாவில் காண்பது இல்லை.. ஆனால் ஒளிப்பதிவாளர் எட்வின் நம்மை அந்த பகுதிக்கு அழைத்து ஒரு ரவுண்டு அடித்து வந்திருக்கிறார்..
சினிமா சாயலே இல்லாத முகங்களை வைத்து ஓர் அழகான சினிமா கொடுத்திருக்கிறார் இயக்குனர் & தயாரிப்பாளர் சுரேந்தர்..

படத்தில் ஆரம்பம் காட்சியிலே நாயகன் சிறை கைதியாக ஜீவா… அதன் பிறகு நகரும் காட்சிகளில் மிகவும் ஒரு அப்பாவி இளைஞனாகவே இருக்கிறார்.. இவர் எப்படி ஜெயிலில் என்ற எதிர்பார்ப்போடு இந்த படத்தை நகர்த்தி இருக்கிறார்.. இறுதியில் அந்த சிறை தண்டனைக்கான காரணம் உணர்ச்சி பூர்வமானது..
நண்பர்களின் பேச்சை கேட்டு காம குழப்பத்தில் இருக்கும் நாயகனுக்கு காதல் என்பதை கூட பிரிக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது.. ஆனால்…

இன்று 2கே கிட்ஸ் GENz காதல் என பல வகையாக பிரிக்கப்பட்டாலும் உணர்வை சொல்லும் காதல் எல்லாம் கடந்துவிட்டது.. அந்த மறந்து போன காதலை மீண்டும் திரையில் கொண்டு வந்து நம் மனச்சிறையில் அடைத்து இருக்கிறார் இயக்குனர் சுரேந்தர்…
Mayabimbum movie review

