வா வாத்தியார் விமர்சனம்… நன்மைக்காக சாட்டை சுழற்றும் வாத்தியார்
வா வாத்தியார் விமர்சனம்… நன்மைக்காக சாட்டை சுழற்றும் வாத்தியார்
ஸ்டோரி…
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1987 டிசம்பர் 24 அதிகாலை 3:30 மணிக்கு மரணம் அடைந்தார்.. அவர் இறந்த அதே சமயத்தில் ராஜ்கிரன் பேரன் கார்த்தி பிறக்கிறார்..
எம்ஜிஆரின் மீது உள்ள தீவிர பக்தியால் தன் பேரனை வாத்தியார் போல நல்வழியில் வளர்க்க நினைக்கிறார்.. நல்லதுக்கு காலம் இல்லை என நம்பியார் வழியில் நடக்கிறார்.. ஒரு கட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார் கார்த்தி.. எதற்கெடுத்தாலும் மாமூல் வாங்கி பல அநியாயங்களை செய்து வருகிறார்..
இதனை அறியும் ராஜ்கிரன் மரணம் அடையும்போது எம்ஜிஆரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். என் பேரனை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும் என்கிறார்..
அதன்படி நம்பியராக வாழ நினைக்கும் கார்த்தியின் உடலில் எம்ஜிஆர் ஆன்மா நுழைகிறார். அதன் பிறகு நடந்தது என்ன.? ஜெயித்தது எம்ஜிஆர்.? நம்பியாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்
கார்த்தி – ராமேஸ்வரன் (அ) ராமு / வாத்தியார்
கிருத்தி ஷெட்டி – வூ (Wu)
ராஜ்கிரண் – பூமிப்பிச்சை
சத்யராஜ் – பெரியசாமி
கலகலப்பு நாயகன் கார்த்தி.. எம்ஜிஆர் ஆகவும் கார்த்தியாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.. எம்ஜிஆர் மேனரிசத்தில் வாத்தியாரை நினைவுப்படுத்துகிறார்.. எம்ஜிஆர் பாணியில் வசனங்கள் பேசி இருப்பது அருமை..
எம்ஜிஆரை தனது உயிர் மூச்சாக வாழ்ந்து வருகிறார் ராஜ்கிரண்.. ஆனால் இவரது உடல் மொழியை விட ஆனந்தராஜனின் உடல் மொழியில் எம்ஜிஆரை காண முடிகிறது..
பல்லு எடுப்பான சத்யராஜ் கெட்டப் கவனிக்க வைக்கிறது.. அவரது கேரக்டரில் இன்னும் வில்லதனத்தைக் காட்டி பழைய சத்யராஜை நினைவுப்படுத்தி இருக்கலாம்..
கிருத்தி ஷெட்டி.. இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.. கவர்ச்சியில் மார்கழி குளிரில் இளசுகளை சூடேற்றுகிறார்..
ஆனந்தராஜ் – பாபு
ஜி. எம். சுந்தர் – மணி
கருணாகரன் – கோவிந்த ராமன்
ஷில்பா மஞ்சுநாத் – மாலினி
ரமேஷ் திலக் – ரமேஷ்
நிழல்கள் ரவி – முதல்வர்
ஆனந்தராஜ், ஜி. எம். சுந்தர், கருணாகரன்,
ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக்,
நிழல்கள் ரவி ஆகியோரின் கேரக்டர் வலுவில்லை.. டயலாக் கூட ஓரிரு டயலாக் மட்டுமே வருகிறது..

டெக்னீசியன்ஸ்…
கதை & இயக்கம் : நலன் குமாரசாமி
ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC
இசை : சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் : டி. ஆர். கே. கிரண்
படத்தொகுப்பு : வெற்றி கிருஷ்ணன்
சண்டை: அனல் அரசு
பாடல் வரிகள் : விவேக், முத்தமிழ், கெலிதீ, துரை
நடன அமைப்பு : சாண்டி / எம். ஷெரிப்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
இணை தயாரிப்பாளர் : நேஹா ஞானவேல்ராஜா
தயாரிப்பு : கே. ஈ. ஞானவேல்ராஜா
பேனர் : ஸ்டுடியோ கிரீன்
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அருமை.. எம்ஜிஆர் ரீமிக்ஸ் பாடலை தவிர்த்து இருக்கலாம் அல்லது அதை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.. நிறைய எம்ஜிஆர் பாடல்களை பயன்படுத்தி வாத்தியார் ரசிகர்களுக்கு மீண்டும் வசந்த காலத்தை நினைவுபடுத்தியிருக்கிறார்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளி பதிவு செய்திருக்கிறார் 1987 காலகட்டத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார்.. எம்ஜிஆர் பாணியில் குதிரையில் வந்து கார்த்தி போடும் அந்த ஃபைட் வாட்டர் லைட்டிங்கில் ஜொலிக்கிறது..
ஞானவேல் ராஜாவுக்கு எப்போதும் அவரது பட ரிலீஸ் பிரச்சனை தான்.. இந்த முறை வாத்தியாரை பொங்கலுக்கு கொண்டு வர முயற்சித்து இருக்கிறார் அதற்கு வாழ்த்துக்கள்..
சூது கவ்வும் & காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமியின் அடுத்த படைப்புதான் இந்த வா வாத்தியார்.. இதுவரை பிளாக் காமெடியில் பயணித்து வந்த நலன் இந்த முறை தனது பாதையை முற்றிலுமாக மாற்றி இருக்கிறார்.. புது முயற்சியாக இருந்தாலும் நலனின் பிளாக் காமெடி நம்பி வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்..

காவல்துறை வரலாற்றில் சஃபாரி உடையில் போலீஸ் யூனிபார்மில் கார்த்தி.. நம்பும்படியாக இல்லை அதற்கான காரணமும் எடுபடவில்லை..
போலீஸ் கார்த்தி கண்ணை மட்டும் கட்டிக் கொண்டால் வாத்தியாராக மாறுவது… அவரை யாருக்கும் தெரியவில்லை அடையாளம் கண்டு பிடிக்கவில்லை என்பதெல்லாம் 1960 லாஜிக்..
கெட்டவராக வாழும் ஒவ்வொருவரையும் வாத்தியார் நல்லவனாக நல்வழிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் இந்த திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்..
ஆக.. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் விருந்து வைத்திருக்கின்றனர் கார்த்தி & நலன் குமாரசாமி கூட்டணி.
Vaa Vaathiyaar movie review

