99 / 66 விமர்சனம்…

99 / 66 விமர்சனம்…

99 / 66 விமர்சனம்…

 

ஸ்டோரி…

ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள வீடு 66 எண் கொண்ட வீட்டில் வசிக்கிறார் நாயகி ரக்ஷிதா மஹாலக்ஷ்மி..

அதே அப்பார்ட்மெண்டில் 99 என் கொண்ட வீட்டில் வசிக்கிறார் ஸ்வேதா.. இவர்கள் இருவரும் நட்புக் கொள்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஸ்வேதாவுக்கு பிரச்சனை வருகிறது.. அப்போது அங்கு இருக்கும் குடியிருப்பு வாசிகளிடம் தோழிக்காக உதவி கேட்கிறார் ரக்ஷிதா.. ஆனால் ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டார் என்கின்றனர்.. அப்படியானால் ஸ்வேதாவிடம் தான் கொண்ட நட்பு எப்படி.? இறந்தவர் எப்படி தனக்கு மட்டும் தெரிகிறார்.. என்ற குழப்பத்தில் இருக்கிறார் ரக்ஷிதா.. அதன் பின்னும் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் மீதிக்கதை..


கேரக்டர்ஸ்…

நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி.. சின்னத்திரையில் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.. பெரும்பாலும் வெள்ளித்திரையில் வந்து அழகான சர்ப்ரைஸ் கொடுத்து செல்வது வழக்கம்.. இதிலும் அழகிலும் நடிப்பிலும் கவருகிறார் ரக்ஷிதா மகாலட்சுமி.. ஆவி புகுந்த பிறகு ஆட்டங்கள் செம..

மற்றொரு நாயகி ஸ்வேதா.. ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் கவர்கிறார்..

சபரி மற்றும் ரோகிந்த்.. நாயகிகளுக்கு ஜோடி என்றாலும் ஹீரோயிசம் கலந்து வில்லத்தனம் செய்து இருக்கின்றனர்..

சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரது காமெடி கொஞ்சமே கை கொடுத்துள்ளது.. பவன் கிருஷ்ணா, சிறப்பு தோற்றத்தில் கே.ஆர்.விஜயா, இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா.. அப்பார்ட்மெண்டில் பல கோணங்கள் வைத்து சுவாரஸ்யப்படுத்தி ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர்..

மீனாட்சி சுந்தரம் படத்தொகுப்பு செய்துள்ளார்.. ஜெயமுருகனின் கலைப்பணி பலம்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கிறார் எம்.எஸ்.மூர்த்தி.. இவரும் நடித்து இருக்கிறார்..

பின்னணி இசையும் மிரட்டல் ரகம்..

தற்போது திகில் படமாக இருந்தாலும் சோசியல் மெசேஜ் கொடுப்பது வாடிக்கையான ஒன்றாக விட்டது.. இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல… பாலியல் குற்றங்களுக்கு எதிராக மெசேஜ் கொடுத்திருக்கிறார்..

99 66 movie review