3 டன் குப்பை.. 6 பேர் மரணம்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரியாக்ஷன் இதோ..

3 டன் குப்பை.. 6 பேர் மரணம்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரியாக்ஷன் இதோ..

 

3 டன் குப்பை.. 6 பேர் மரணம்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரியாக்ஷன் இதோ..

 

நேற்று அக்டோபர் 27ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கட்சி முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டில் உள்ள வி சாலையின் நடைபெற்றது.

இதில் 6+ லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்றனர்..

இம்மாநாட்டிற்கு 15,500 வாகனங்கள் வந்ததாக கூறப்படுகிறது..

மாநாடு கிட்டத்தட்ட இரவு ஏழு மணிக்கு நிறைவடைந்தாலும் 6 நேரங்களுக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதாகவும் கூறப்படுகிறது.. இதனால் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது..

திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் வரை சென்றதாகவும் எங்கும் Uயுடன் போட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறியதாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்து அதிகாலை 3 மணியளவில் சீரானதாக தகவல்கள் வந்துள்ளன..

மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என சுமார் 3 டன் குப்பைகள் இருந்தன.

அப்போது பல்வேறு காரணங்களில் 6 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

தற்போது இன்று அக்டோபர் 28ஆம் தேதி உயிரிழந்தவர்களுக்கு நடிகர் விஜய் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில்

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்

திரு. JK.விஜய்கலை,
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்

திரு. வசந்தகுமார்,
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை

திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.

திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி

மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த

திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை

ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

6 Vijay fans died because of Tamilaga vettri kazhagam maanadu