டோரதி விமர்சனம்.. 4.25/5.. இளையராஜாவின் இசை விருந்தில் கார்த்திக் சுப்புராஜின் சமூக மருந்து
டோரதி விமர்சனம்.. 4.25/5.. இளையராஜாவின் இசை விருந்தில் கார்த்திக் சுப்புராஜின் சமூக மருந்து
ஸ்டோரி…
1990களில் மதுரையில் நடக்கும் கதைக்களம் இது.. அப்பா முத்துக்குமார் மூத்த அண்ணன் சௌந்தரராஜன்… அவரது தம்பி சனந்த்.. இவரது சிறுவயது தோழன் ரிஷிகாந்த்..
சிறுவயதிலேயே கொடுமையால் ஆண்களின் அதிகார திமிரால் அம்மா அக்காவை இழந்தவர் சனந்த்.. தன் நண்பனுடன் இளம் வயது பருவத்தை கடக்கிறார்.. அப்பா மற்றும் அண்ணனின் கர்வத்தால் விரக்தியில் வாழ்கிறார்..
ஒரு கட்டத்தில் அண்ணியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார்.. ஒரு தோழியாக தன் துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்.. அண்ணி பாசத்தால் நண்பனும் விலகி செல்கிறான்..
அதன் பிறகு சனந்த் வாழ்க்கை என்ன ஆனது.? என்பதெல்லாம் யூகிக்க முடியாத கார்த்திக் சுப்புராஜின் அழுத்தமான திரைக்கதை..
கேரக்டர்ஸ்…
சமீபத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘மொத ராத்திரி’ நாயகன் ரிஷிகாந்துக்கு அடுத்த வெற்றி உறுதி.. நண்பரிடம் சுற்றி திரிந்து ஒரு கட்டத்தில் நண்பனுக்கு எதிராக திரும்பும் அந்த மனவேதனையை முகத்தில் உணர்வு பூர்வமாக கொடுத்து இருக்கிறார்..
திருநங்கைகள் மத்தியில் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது எதார்த்த சாமானியனின் உணர்வுகளை காட்டியிருக்கிறார்..
மற்றொரு நாயகன் சனந்த்.. விருது கொடுத்து பாராட்ட வேண்டும்.. அவரது கேரக்டர் குறித்து சொல்ல முடியாது.. அவரது நடிப்பை பார்த்து கைதட்டாமல் இருக்க மாட்டீர்கள்.. குடும்பத்திற்கு பயந்து அண்ணியுடன் அவர் மறைந்து மறைந்து பேசும் போதும் அவரது எக்ஸ்ட்ரா ஃபீலிங்ஸ் வெளிப்படும் அழகிய தருணம் அது..
கேரளத்து அழகிய பெண்ணாக கீர்த்தி சுரேஷ்.. கொஞ்ச நேரமே வந்தாலும் டோரதியாக மனதில் நிறைகிறார்..
கிராமத்து அடாவடி இளைஞனாக சௌந்தரராஜா.. குடித்துவிட்டு அலப்பறை செய்யும் காட்சிகளிலும் மாஸ் ரகம்..
வயதான கெட்டப்பில் முத்துக்குமார்.. இது அவர் தானா என்று சந்தேகம்.. ஆணாதிக்க கொடுமைக்கார கேரக்டராக வாழ்ந்திருக்கிறார்.. அவர் குரல் அவரது உடல் மொழி வேற லெவல் ரகம்..
ரிஷிகாந்த் அம்மா கேரக்டர், திருநங்கை ஜீவா சுப்ரமணியம், கஜராஜ், ராம்ஸ் ராமச்சந்திரன் துரைராஜ், உள்ளிட்டோர் படத்திற்கு பெரிய பலம்..
டெக்னீசியன்ஸ்…
ஒருத்தவன் வாழனும் வாழ கூடாதுன்னு முடிவு பண்ண நாம யாரு கடவுளா.? உள்ளிட்ட வசனங்கள் அதிகார திமிர் பிடித்தோருக்கு சாட்டையடி..
நீண்ட நாட்களுக்குப் பிறகு… திரையைப் பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுவிதமாக ஒளிப்பதிவில் கூட உருக செய்கிறார் திரு.. மதுரை முதல் வட இந்தியா பகுதிகளை கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ். திரு..
முத்துக்குமார் வீடு அந்த காலத்து பழைய அழுக்கு பிடித்த நினைவுகளை மலரச் செய்யும்.. அந்த பாதாள கிணறு அதன் உள்ளே செல்லும் வழி.. ரிசிகாந்த் லாரி ஓட்டும் போது அதில் ட்ரோலி செய்யப்பட்ட கேமரா ஆங்கிள் விதம் கூட அழகு..
கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும் சிறப்பு..
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையைத் தவிர வேறு எவரும் உணர்வு / உயிர் கொடுக்க முடியாது என ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்து இருக்கிறார்..
டோரதியை பார்த்துவிட்டு வரும்போது ‘வண்ணக்கிளியே உன்ன காணாத நான் இங்கு நான் இல்லையே.. என்ற வரியை நீங்கள் பாடாமல் வர மாட்டீர்கள்..
கீர்த்தியின் முடிவைப் பார்த்து சனந்த் ஓடும்போது இளையராஜா பின்னணி இசை நம்மை பதறச் செய்கிறது..
‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ என விதவிதமாக அனைத்து உணர்வுகளும் இளையராஜா இசையில் புத்துணர்ச்சி பெறும்..
இது இயக்குனர் கார்த்தி சுப்புராஜின் 10வது திரைப்படம் என்றாலும் இதுதான் அவரது பெஸ்ட் படம் என்று அடித்து சொல்லலாம்.. இடைவேளை வரை கிராமத்து மனிதர்களின் ஆணாதிக்க நபர்களின் கொடுமைகளை சொன்ன அவர் இடைவேளைக்குப் பிறகு திருநங்கைகளின் வலியை நம்மில் கடத்தி செல்கிறார்..
திரைக்கதைக்கு சிறந்த நடிகர்கள் கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்…
இயக்குனர் வேண்டுகோளின் படி சிலவற்றை சொல்லக்கூடாது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறோம்..
ஆக இளையராஜா இசை விருந்தில் அதிகார வர்க்கம் திருந்த சமூகப் பொறுப்புடன் மருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்..
ilaiyaraaja win Dorothy movie review
—

