Thalaivar 173 – கமல் & ரஜினி இணையும் படத்தை இயக்குபவர் இவரா.?
Thalaivar 173 – கமல் & ரஜினி இணையும் படத்தை இயக்குபவர் இவரா.?
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர் சி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் இந்த படம் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக சுந்தர் சி திடீரென அறிக்கை வெளியிட்டார்..
இதனையடுத்து திரையுலகம் அதிர்ச்சியானது.. ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை சுந்தர் வேண்டாம் என்கிறாரே என்ற தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவியது..
ஆனால் தன் பட நாயகன் ரஜினிக்கு கதை பிடிக்கும் வரை கதை கேட்பேன் என்று தயாரிப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்… மேலும் புது இயக்குனர்கள் கதை சொல்லலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்..
அதன்படி ‘தலைவர் 173’ படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
தேசிய விருது வென்ற பார்க்கிங பட டைரக்டர் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.
பின்னர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘டிராகன்’ படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குவார் எனவும் கூறப்பட்டது.
.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்குவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது
இது பற்றிய அறிவிப்பு.. இன்னும் ஒரு சில தினங்களில் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம்..
Which Director will direct Thalaivar 173 movie
—

