2026 புத்தாண்டு விருந்து.. : சீமான் – திருமுருகன் காந்தி ஆகியோரின் பாராட்டு பெற்ற ‘சல்லியர்கள்’ ரிலீஸ்
2026 புத்தாண்டு விருந்து.. : சீமான் – திருமுருகன் காந்தி ஆகியோரின் பாராட்டு பெற்ற ‘சல்லியர்கள்’ ரிலீஸ்
‘மேதகு’ படத்தை இயக்கிய கிட்டு இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சல்லியர்கள்’.
சேது கருணாஸ், கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர்.
சத்யாதேவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கருணாஸ், ‘களவாணி’ திருமுருகன், மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சிபி சதாசிவம்,
படத்தொகுப்பு – சி,எம் இளங்கோவன்,
கலை இயக்கம் – முஜிபூர் ரஹ்மான்,
சண்டைப்பயிற்சி – எஸ்.ஆர்.சரவணன்
வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு கருணாஸ் மகன் கென், அவரது நண்பர் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தது.

அப்போதே தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘சல்லியர்கள்’ படத்தை பற்றி பாராட்டி வாழ்த்தி இருந்தனர்.
சீமான் பேசும்போது: ‘சல்லியர்கள்’ என்பதை ஒரு படம் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. அது ஓர் ஆவணம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்தவர்கள்.. நம் தமிழர்கள் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.” என்று பேசி இருந்தார்..
பலமுறை இந்தப் படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு 2025 டிசம்பர் 12ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டிருந்தது.. மறுபடியும் இதன் ரிலீஸ் தள்ளி போனது..
தற்போது இறுதியாக 2026 புத்தாண்டு பிறக்கும் தினத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
தற்போது படக்குழுவினர் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
Karunas Production Salliyargal set to Release on 01 January 2026

