‘ஜனநாயகன்’ & ‘பராசக்தி’ ரிலீஸ் மோதல் ஏன்..? – ஆகாஸ் பாஸ்கரன் விளக்கம்

‘ஜனநாயகன்’ & ‘பராசக்தி’ ரிலீஸ் மோதல் ஏன்..? – ஆகாஸ் பாஸ்கரன் விளக்கம்

‘ஜனநாயகன்’ & ‘பராசக்தி’ ரிலீஸ் மோதல் ஏன்..? – ஆகாஸ் பாஸ்கரன் விளக்கம்

 

2026 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கவும் அடுத்ததாக பொங்கல் பண்டிகை வரவேற்கவும் தமிழ் சினிமா தயாராகி வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்..

தற்போது விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் இது தனது கடைசி படம் என அறிவித்திருந்தார்.. எனவே ஜனநாயகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை ஒரு லட்சம் பேர் திரண்டு பார்த்தனர்.. இதை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரவி மோகன் அதர்வா ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது..

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 3ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் நடைபெற உள்ளது..

சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.. இந்தக் கூட்டணி ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ படத்தில் தேசிய விருதை வென்றதால் இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது..

முன்னதாக ஜனவரி 14 பராசக்தி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென பத்தாம் தேதிக்கு ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் Dawn Pictures ஆகாஸ் பாஸ்கரன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது..

‘பராசக்தி’ படம் தொடங்கும் முன்பே 2026 பொங்கல் ரிலீஸ் என நாங்கள் தீர்மானித்து விட்டோம்.. அதன்படியே திட்டமிட்டு படத்தின் வேலைகளை தொடர்ந்து செய்து வந்தோம்..

இந்த நிலையில் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பொங்கல் பண்டிகைக்கு கிட்டத்தட்ட பத்து நாட்கள் விடுமுறை இருப்பதால் படத்தை முன்பே ரிலீஸ் செய்ய எங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி நாங்கள் இப்போது ஜனவரி 10ஆம் தேதி பராசக்தி ரிலீஸ் என அறிவித்துள்ளோம்” என ஆகாஸ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

 

Akash Baskaran open talk about Jana Nayagan and Parasakthi clash