கடலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் கொண்டாட்டம்
கடலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி அரசியல் பணிகளை தீவிரமாக அவரது ஆதரவாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொள்கை மாநாடு நடைபெற உள்ளது.
இதனையடுத்து விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் தீவிரமாக தங்கள் அரசியல் பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும் நடிகர் விஜய்யும் தேசிய தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது உருவ சிலைக்கு மாலை அணிவித்து தனது அரசியல் பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
*தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வள்ளலார்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்கள் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட நிர்வாகிகள் சீனு, ராஜசேகர், ராஜ்குமார் மற்றும் தொண்டர்கள், தோழர்கள், திரளானோர் கலந்து கொண்டனர்.
Vijays TVK political party members honour Vallalar

