நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’.. ஆட்டோ டிரைவரை கடுப்பேற்றிய கவின்

நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’.. ஆட்டோ டிரைவரை கடுப்பேற்றிய கவின்

 

 

நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’.. ஆட்டோ டிரைவரை கடுப்பேற்றிய கவின்

ஏமாற்றும் பிச்சைக்காரன் கவின்..

 

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார்.. இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்..

இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ப்ளடி பெக்கர்’.

அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்’.

கவின், மாருதி பிரகாஷ், கவின், ரெடின் கிங்ஸ்லி, சுனில் சுகதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் Begger Peek வெளியாகி வைரலாகி வருகிறது.. இந்த டீசரில் கால் இல்லாதவராக பிச்சை எடுப்பவராக கவின் நடித்திருக்கிறார்.. அப்போது ஆட்டோ ஓட்டுநர் இவருக்கு தர்மம் இடுகிறார்.. சில மணித்துளிகளில் அந்த சாலையில் வரும் சாவு ஊர்வலத்தை பார்த்து எழுந்து நின்று நடனமாடுகிறார் கவின்.. இதை பார்த்த ஆட்டோ டிரைவர் கோபம் அடைகிறார்..

இந்தப் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது…

இதே தீபாவளி திருநாளில் அக்டோபர் 31ஆம் தேதி கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படமும் ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kavin starring Bloody Begger peek goes viral