முதல் படத்திலேயே முத்திரை பதித்த டைரக்டர் சஞ்சய்..; குஷியில் விஜய் ரசிகர்கள்

முதல் படத்திலேயே முத்திரை பதித்த டைரக்டர் சஞ்சய்..; குஷியில் விஜய் ரசிகர்கள்

 

முதல் படத்திலேயே முத்திரை பதித்த டைரக்டர் சஞ்சய்..; குஷியில் விஜய் ரசிகர்கள்

 

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான படம் ‘சிக்மா’. இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.. நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்று விட்டதால் அவரது மகன் சினிமாவுக்கு அறிமுகமாவதால் விஜய் ரசிகர்கள் தரப்பில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது… எனவே இந்த படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது..

சந்தீப் கிஷன் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார்..

இந்த படம் 2 நாள் வசூலாக ரூ.6+ கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிகிறது…

ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் கொடுத்து முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சய் இயக்குனராக முத்திரை பதித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

மேலும் சிக்மா படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஜேசன் சஞ்சய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பார்.. அவரை திரையில் காண்பதற்கு இளமை விஜய் போலவே இருப்பதால் ரசிகர்களும் விஜய்யை பார்த்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இனி எங்கள் குட்டி தளபதி விஜய் என்றும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்..

 

Vijay fans happy with Sigma success and Sanjay look

 

 

 

 

Related articles