அருண் விஜய்யை அடுத்து விஜய்சேதுபதியை இயக்கும் பாலா

அருண் விஜய்யை அடுத்து விஜய்சேதுபதியை இயக்கும் பாலா

அருண் விஜய்யை அடுத்து விஜய்சேதுபதியை இயக்கும் பாலா

 

 

ஒரு நடிகருக்கு… அவரின் படத்திற்கு எப்படி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதுபோல தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்..

கே பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம், ஷங்கர், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், சேரன், சுந்தர் சி, வெற்றிமாறன், ராம், மாரி செல்வராஜ் ரஞ்சித் உள்ளிட்டோரின் வரிசையில் இயக்குனர் பாலாவும் முக்கியமானவர்..

பாலாவின் இயக்கத்தில் சிறந்த நடிகர்கள் என பெயர் பெற்றோர் பலர்.. விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா, ஜிவி பிரகாஷ், என பல திரை கலைஞர்களை அடையாளம் சொல்லலாம்..

இறுதியாக பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் வாய் பேச முடியாதவராக நடித்தார்.. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஹீரோ ஊமையாக நடித்ததில்லை..

இந்த நிலையில் பாலாவின் அடுத்த படம் இயக்கம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..

 

Director Bala and Actor Vijay Sethupathi new movie news updates

 

Related articles