குழந்தைகளையும் கவர்ந்த ‘ஏழுகடல் ஏழு மலை’ படம்..; மகிழ்ச்சியில் இயக்குநர் ராம்
குழந்தைகளையும் கவர்ந்த ‘ஏழுகடல் ஏழு மலை’ படம்..; மகிழ்ச்சியில் இயக்குநர் ராம்
கற்றது தமிழ்… தங்க மீன்கள்.. தரமணி… பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம்… தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருவதால் இயக்குனர் ராம் அவர்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது..
எனவே அவரது இயக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது வழக்கம்.. இந்த நிலையில் கடந்த வாரம் நிவின்பாலி – அஞ்சலி – சூரி உள்ளிட்டோர் நடித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் ரிலீஸ் ஆனது..
சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்திருந்தார்..
வித்தியாசமான இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்தது.. வழக்கம் போல ராம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ரிலீசான மூன்று தினங்களில் ரூ. 2.5+ கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது..
சாகா வரம் பெற்ற ஒருவனின் ரயில் பயணம்.. கனவு காதலியை தேடி ஒரு நீண்ட பயணம் என பல அம்சங்கள் இந்த படத்தில் இருந்தது..
மேலும் எல்லா ஜீவராசிகளின் உயிரும் ஒன்றுதான்… மனிதன் உயிருக்கு மதிப்பு அதிகம் மற்ற விலங்குகள் உயிர் குறைவு.. ” என்று இல்லை என்ற கருத்தை வலியுறுத்தி ஒரு எலிக்கு உண்டான பாசத்தையும் காட்டி இருந்தார் இயக்குனர் ராம்.
இத்துடன் படத்தில் முதலை குரங்கு முயல் உள்ளிட்ட விலங்குகளின் அனிமேஷன் காட்சியும் பெற்று இடம் பெற்று இருந்தது.. இந்த காட்சிகள் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது..

ஒரு காட்சியில் குரங்கு வீசப்படுவதை கண்ட ஒரு குழந்தை கோபித்துக் கொண்டதாக இயக்குனர் ராம் பத்திரிக்கையாளர் காட்சியில் தெரிவித்து இருந்தார்…
நடுத்தர வயது ரசிகர்கள் குறித்து படமாக இருந்தாலும் குழந்தைகளை இந்த படம் வெகுவாக கவர்ந்துள்ளது… தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
Childrens like Yezhu Kadal Yezhu Malai movie Director Ram happy

