நம்மை விமர்சிப்பவர்கள் விமர்சிட்டே இருப்பாங்க.. தினமும் புத்தகம் படிங்க… சிவகார்த்திகேயன்

நம்மை விமர்சிப்பவர்கள் விமர்சிட்டே இருப்பாங்க.. தினமும் புத்தகம் படிங்க… சிவகார்த்திகேயன்

 

நம்மை விமர்சிப்பவர்கள் விமர்சிட்டே இருப்பாங்க.. தினமும் புத்தகம் படிங்க… சிவகார்த்திகேயன்

 

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்..

இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.. ‘பார்க்கிங்’ டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்..

இந்த நிலையில், சென்னையில் சிவகார்த்திகேயன் தன் நற்பணி மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார்..

அந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது…

‘நாம் அனைவரும் அன்பினால், அன்புக்காக ஒன்றாக இருக்கிறோம். நம் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொண்டு அதில் தெளிவாக இருக்க வேண்டும். நம்மை விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டுடே தான் இருப்பார்கள்.

நன்றாக படியுங்கள். சம்பாதியுங்கள். குடும்பம்தான் முக்கியம். ஒரு நாளைக்கு 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள்… அப்போது சிந்தனை மேம்படும்… அப்போதுதான் சோசியல் மீடியாவில் விலகியிருக்க தோன்றும்.” என ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்..

 

Actor Sivakarthikeyan advice at his Fans club meeting

 

 

 

Related articles