அஜித்துடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்.?
அஜித்துடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்.?
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் அஜித் உடனே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார் ரேஸ் பந்தயங்களை கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்..
இனி அஜித் நடிக்க வர மாட்டார் என சிலர் சொல்லி வந்த நிலையில் திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அஜித் என தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வந்தது..
இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இதில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.. இவர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்..
டேர் டேவில் படத்தின் ஷூட்டிங் சில காட்சிகள் இந்தியாவிலும் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளிலும் நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ajith movie Dare Devil heroine updates

